இராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம் என்றால் அஜித்திற்கு மூன்று கிரஹமும் உச்சத்தில் இருக்கிறது. கார் ரேஸ், மத்திய அரசின் விருது, விடாமுயற்சி வெற்றி என தன்கனவுகளை நனவாக்கி வாழ்க்கையில் அழுத்தமாக, அர்த்தமாக தடம்பதித்து வருகிறார். நிஜ வாழ்வில் பைக் மற்றும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் காட்டும் ஆர்வம், அதில் விபத்துகளைச் சந்தித்த பிறகும் கூட தொடர்ந்து ஈடுபடுவது, திரைப்படங்களைக் கடந்த ஒரு அடையாளத்தை அவருக்கு கொடுத்துள்ளது. கிட்டதட்ட 15 வருடங்கள் கழித்து 2024இல் கார் ரேஸிங் களத்திற்குள் நுழைந்த நடிகர் அஜித், சர்வதேச கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக 'அஜித்குமார் ரேஸிங்' என்ற அணியைத் தொடங்கினார்.

துபையில் ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்ற '24 ஹெச் சீரிஸ்' கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் தலைமையிலான இந்த 'அஜித்குமார் ரேஸிங் அணி' போர்ஷ் 992 கப் கார் (எண் 901) ரேஸ் என்ற பிரிவில் பங்கேற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தொடரில், போர்ஷ் கேமன் GT4 (எண் 414) ரேஸ் என்ற பிரிவில் கலந்துகொண்ட அஜித்குமாருக்கு 'ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்' என்ற விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பாலாபிஷேகமே ஓவர்... பீர் அபிஷேகம் எல்லாம் அட்டூழியத்தின் உச்சம்... எல்லை மீறிய அஜித் ரசிகர்கள்...!
இந்நிலையில், யார் கண் பட்டதோ? போர்ச்சுக்கள் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. போர்ச்சுகல் ரேஸ் பயிற்சியின் போது இந்த தகவலை நடிகர் அஜித்குமாரே கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், ''எனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, நான் என்ன செய்கிறேன் என்பதை அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நன்றி. இன்றைய பயிற்சியின் போது கூட எனது கார் விபத்திற்குள்ளானது. விபத்திற்குள்ளான காரை மெக்கானிக் குழுவினர் சரி செய்து விட்டனர்'' என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விடாமுயற்சி படத்திற்கு வெறித்தன வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்!