'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனின் கதாபாத்திரம் சரவணனாக என்கிற ரோலில் நடித்துள்ளார். கணவர், விஞ்ஞானி, கனவுகளைத் தேக்கி வைத்திருப்பவர் என சரவணன் தனக்கு வரும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே இவரின் கதாபாத்திரம்.
நெட்ஃபிலிக்ஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ’டெஸ்ட்’ திரைப்படத்தில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவன் நடித்துள்ளார். மேதைமைக்கும் விரக்திக்கும் இடையிலான கோட்டில் பயணிக்கும் நபரை இந்த கதாபாத்திரத்தில் கொண்டு வந்திருக்கிறார். ஆர். மாதவனின் அன்பு நண்பரும், நடிகருமான சூர்யா, ’டெஸ்ட்’ படத்தில் மாதவனின் சரவணன் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார். 
சரவணன் தனது கனவை நனவாக்கப் போராடும்போது அந்த லட்சியம் நிறைவேற பல தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த பயணம் விடாமுயற்சி, அறிவு மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் சிலிர்ப்பூட்டும் கதையாக அமையும்.
இதையும் படிங்க: சூர்யாவை பாலோ செய்யும் நயன்தாரா... முதலில் அஜித் இப்போ சூர்யா... ஓடிடியிலும் போட்டியா...!
நடிகர் ஆர். மாதவன் இந்த படம் பற்றி கூறும் போது, "சரவணன் ஒரு புத்திசாலி. இதுவே அவருடைய பலமும் சுமையும். சரவணன் தனது கனவை அடைய பல தியாகங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு அவர் தரும் விலை அதிகம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது தனது கனவிற்காக ஒருவன் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று வியந்து யோசித்தேன். போராட்டம், நம்பிக்கை மற்றும் மீண்டு வருதல் என ‘டெஸ்ட்’ பார்க்கும்போதும் பலரும் இதை தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்வார்கள். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘டெஸ்ட்’ படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

மேலும் இந்த படத்தில், மாதவன் வாங்கிய சம்பளம் பற்றிய தகவலும் கசிந்துள்ளது. அதன்படி ரூ.10 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். நடிகை நயன்தாராவுக்கும் ரூ.10 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெளியானது நயனின் கதாபாத்திர அறிமுக வீடியோ...! ரிலீசான சிறிது நேரத்தில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல்..!