பிரபுதேவா நடனத்தில் எந்த அளவிற்கு பெயர் பெற்றவரோ அதே போல் சர்ச்சையில் சிக்கியத்திலும் பெயர் பெற்றவர். அந்த அளவிற்கு இதற்கு முன் ஒரு நடிகையுடன் லீவ்விங்கில் இருந்து பலரது வசைபாடுதலுக்கு உள்ளானார். தனக்கு கிடைத்த பல பெயர்களை இழக்க அந்த சம்பவம் காரணமாக இருந்தது. ஆனாலும் தற்பொழுது பிரபுதேவாவும் அந்த நடிகையும் பிரிந்து வாழ்க்கை எப்படி பட்டது என்பதை புரிந்து கொண்டு தனக்கான பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, தனது கெரியரில் கவனம் செலுத்திய பிரபல நடன கலைஞரும், நடிகருமான பிரபு தேவா. சமீபத்தில் இவரது நடன கான்சட் நிகழ்ச்சி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், என நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பாக்கியராஜ், நடிகைகள் ரோஜா, மீனா, ரம்பா, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்களும் கோடிக்கணக்கான ரசிகர்களும் பங்கேற்று வைப் செய்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் மைக்கில் ஜேக்சன் "பிரபு தேவா"தான்.. நான் சொல்லல.. வடிவேலு மாஸ் ஸ்பீச்..!

இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலேயே பிரச்சனைகளுடன் தான் ஆரம்பித்தது, காரணம் பிரபுதேவாவுடன் ஸ்ருஷ்டியும் பங்கேற்று நடனம் ஆட இருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டளார்களிடம் இருந்து தனக்கு மரியாதை கிடைக்கவில்லை, சரியான திட்டமிடல் இல்லை என சொல்லி அந்த ஷோவில் இருந்து ஸ்ருஷ்டி விலகினார். ஆனாலும் நிகழ்ச்சி அன்று பிரபு தேவாவின் மகன், சாண்டி மாஸ்டர், நடிகர்கள் பரத், சாந்தனு, நாகேந்திர பிரசாத், நடிகைகள் லட்சுமி ராய், ரித்திகா சிங், அதிதி ஷங்கர், பார்வதி நாயர், சாக்ஷி அகர்வால் ஆகியோர் பிரபு தேவாவுடன் நடனமாடி அனைவரையும் கொண்டாட வைத்தனர்.

இதனை தொடர்ந்து, நடிகர் தனுஷுடன் "ரௌடி பேபி" பாடலுக்கும், எஸ்.ஜே.சூர்யா உடன் "காத்தடிக்குது காத்தடிக்குது" பாடலுக்கும், வடிவேலுவை வம்பிழுத்து 'பேட்ட ராப்' பாடலுக்கும் அனைவருடன் நடனமாடிய பிரபு தேவாவின் கான்சர்ட் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், பல நடிகர்களின் வாரிசுகள் படத்தில் நடித்தும், படத்தை இயக்கியும் வரும் சூழலில், நடிகர் மற்றும் பிரபல நடன இயக்குநர் பிரபுதேவா இதுவரை யாரிடமும் அறிமுகப்படுத்தாத தனது மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவின் நடன திறமையை இந்த கான்சர்ட் மூலம் அனைவரது முன்னிலையில் அறிமுகம் செய்தார். அதோடு மட்டும் நிறுத்தாமல் தனது மகனுடன் "பேட்ட ராப்" பாடலுக்கு டான்ஸ் ஆடி இருவருமே பட்டைய கிளப்பினர். தற்பொழுது அந்த வீடியோவை பிரபுதேவாவே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்து, உன்னை நினைத்தால் பெருமையாக உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

இதனை பார்த்த பல ரசிகர்கள், இந்தியாவின் மைக்கில் ஜேக்சனான பிரபுதேவாவின் மகன் எதிர்காலத்தில் குட்டி மைக்கில் ஜேக்சனாக உருவெடுப்பார் என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் மைக்கில் ஜேக்சன் "பிரபு தேவா"தான்.. நான் சொல்லல.. வடிவேலு மாஸ் ஸ்பீச்..!