"செல்ஃபி புள்ள" பாடலை கேட்டால் உடனியாக நினைவுக்கு வருபவரும் "ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே" என்ற பாடலை கேட்டாலும் நம் கண்முன் வருபவர் அழகின் மொத்த உருவமான நடிகை சமந்தா.. சிரிப்பில் குழந்தை முகத்தை காமித்து நடிப்பில் குழந்தை தன்மையை வெளிக்காட்டி தனக்கென ரசிகர்களை உண்டாக்கிய சமந்தா தனது வாழ்க்கையில் அடியாக வாங்கி வருகிறார்.

யசோதாவில் இருந்து சமந்தாவாக மாறி தனது வாழக்கையை படத்தில் சந்தோஷமாக கழித்து வந்தார். கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்று முன்னணி நட்சத்திரமாக வளம் வந்தார்.
இதையும் படிங்க: இனி எனது முதல் காதலனுடன் வாழப் போகிறேன்... நடிகை சமந்தா ஓபன் டாக்..!

மகிழ்ச்சியாக படத்தில் பயணம் செய்த, இவர் வாழ்வில் வினையாய் வந்தார் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் காதல் திருமண வாழக்கையை குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வந்த இருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதனை அடுத்து, நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து ரூ.200 கோடி பட்ஜெட்டில் இரண்டாவது முறையாக காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தாவோ, தன் வலிகளை மறைத்து ஈஷா யோகா மையம் போன்ற பல இடங்களுக்கு மன அமைதிக்காக சென்று வருகிறார். இதனை தொடர்ந்து, தற்பொழுது சமந்தா பேசி வெளியான வீடியோவில் அவர் "நான் தற்போது ராஜ் மற்றும் டிகே-வின் ரக்த பிரஹ்மத் தொடரை முதலில் முடிக்க வேண்டும் என்றும் நான் திரைப்படத்தில் இருந்து விலகிய காலமெல்லாம் முடிந்துவிட்டது என்றும் இனி சினிமா தான் என் முதல் "காதல்" அதனுடன் தான் இனி பயணிக்க போகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அதற்கு ஆரம்பமாக, தன்னை தயார் படுத்த நினைத்த சமந்தா, முதலில் தனது உடலை வலுப்படுத்த நினைத்து ஜிம்முக்கு சென்று உள்ளார். அங்கு 110 கிலோ எடையை அசால்டாக தூக்கி சிங்கம் போல ஸ்டெந்த் எனக்கு என வெயிட் காமித்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உங்களை கவலைகளையும் வலிகளையும் போக்க ஜிம்முக்கு போங்க என கூறியிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், சமந்தா நாக சைதன்யா மீது உள்ள கோபத்தை காமிக்க, தன் முழு கோபத்தை பலமாக்கி 110 கிலோவை அசால்ட்டாக தூக்கியிருக்கிறார் என கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: நாக சைத்தன்யாவின் புது மனைவி வெளியிட்ட ரகசிய போட்டோ.. அதிர்ச்சியில் உறைய வைத்த அந்த புகைப்படம்..!