தமிழ் திரையுலகில் அதிக பட்ஜெட்டை வைத்து மிகவும் பிரம்மாண்டமாக படம் எடுப்பவர் என்றால் அனைவரது நினைவிற்கு வருபவர் இயக்குநர் சங்கர். படப்பிடிப்பின் பொழுது ப்ரொடியூசர்கள் நெஞ்சை பிடித்து கொள்ளும் அளவிற்கு செலவை இழுத்து விடும் சங்கர், பட வெளியீட்டின் பொழுது ப்ரொடியூசர்கள் நெஞ்சார வாழ்த்தும் அளவிற்கு வசூலை வாரி கொடுக்கும் படைப்பை தருவார்.

இந்த நிலையில் பிரம்மாண்டத்திற்கு பேர் போன சங்கரின் பெயர் தற்பொழுது மாறி வருகிறது காரணம் இவரது இந்தியன் 2 திரைப்படம்.1996 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான "இந்தியன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. அதுமட்டுமல்லாமல் பல விருதுகளையும் பாராட்டுகளையும் வாங்கி குமித்தது.
இதையும் படிங்க: விரைவில் "இந்தியன் 3"... சங்கர் மாறலாம் அவரின் படைப்பு மாறாது..!

இப்படி இந்தியன் படத்தில் வர்ம கலைகளை வைத்து அசத்திய கமல், இந்தியன் 2 படத்தில் வர்ம கலை என்ற பெயரில் தியேட்டருக்கு வந்த ரசிகர்களை திணற விட்டார். டான்ஸ் வர்மக்கலை, சிரிப்பு வர்மக்கலை, ரொமான்ஸ் வர்மக்கலை என கலையுலகில் கலையை வைத்து கலாய் வாங்கினார் கமல்ஹாசன். அதுமட்டும் இல்லாமல் சித்தார்த் "சோஷியல் மீடியா சார்: என்று சொன்னதெல்லாம் ட்ரோல்களின் உச்சத்திற்கே சென்றது. இப்படி இந்தியன் 2 ஃபிளாப் படமாக அமைந்தது. சங்கரின் கெரியரிலும் பிளாக் மார்க் ஆக அமைந்துள்ளது.

இதனை அடுத்து நிலுவையில் உள்ள "இந்தியன்-3" படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முன்னெடுத்து நடத்த லைகா நிறுவனமும், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனமும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, எந்திரன்' திரைப்பட கதை திருட்டு விவகாரத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதனால் கடும் விரக்திக்கு ஆளான சங்கர், அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என்று தெரிவித்து இருந்தார். இப்படி இருக்க, டிராகன் படத்தை பார்த்த இயக்குநர் சங்கர் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினரை பாராட்டி, அவரது ட்விட்டர் தளத்தில் "டிராகன் திரைப்படம் ஒரு அழகான படம்" என கூறி தனது தனித்துவத்தை காட்டினார்.

இப்படி தன் வாழ்வில், பல அடிகளை தொடர்ந்து பெற்று வரும் இயக்குநர் சங்கர், சற்றும் மனம் தளராது இருப்பவர். ஆதலால் சங்கர் அடுத்ததாக 'வேள்பாரி' படத்தை இயக்க உள்ளதாக தெரிகிறது. அது குறித்து ஏற்கெனவே அவர் சில பேட்டிகளிலும் தெரிவித்துள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்து கொண்டு இருந்தனர்.

'வேள்பாரி' நாவலை ஷங்கர் படமாக்கினால் அவரது பெயரை கண்டிப்பாக மீட்டு எடுக்க முடியும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: இக்கட்டான சூழ்நிலையிலும் இயக்குநர் சங்கர் போட்ட உருக்கமான பதிவு..! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!