நேற்று வரை பல ஆக்ஷன் படங்களை மட்டும் தங்கள் நினைவுகளில் வைத்து இருந்த ரசிகர்களின் நாடி நரம்பெல்லாம் துடித்து நினைவுகள் முழுவதையும் தன் வசப்படுத்திய படம் என்றால் அது தான் "டிராகன்". AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான், பிரதீப் ரங்கநாதன் ஆகியோரின் இணைப்பில் தற்போது வெளியாகியுள்ள வெற்றி படமாக மாறி உள்ளது டிராகன். இப்படம் வெளியாகும் முன்பே, பல விமர்சனங்கள், பல ப்ரமோஷன்களை கடந்த நிலையில் இன்று தியேட்டர்களை அதிரவைத்து கொண்டு இருக்கிறது.

படம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று கூறி வரும் ரசிகர்கள், படம் வெளிவருவதற்கு முன்பு இன்ஸ்டாவில் நடிகர் பிரதீப்பை வசைபாடிய பெண்ணை தேடி தேடி கமெண்ட் செய்து வருகின்றனர். லைஃபில் கிடைக்கும் சான்ஸ்களை மிஸ் பண்ண கூடாது என்பதை மையமாக வைத்து கல்லூரி வாழ்க்கையை மாயாஜாலமாக்கி உருவாகி உள்ள இப்படம் தான் இன்று தமிழ்நாடே போற்றும் படமாக மாறி உள்ளது. இப்படம் கண்டிப்பாக ரூ.100 கோடிக்கு மேல் வசூலாகும் என பிரபலங்களும், ரசிகர்களும் கூறி வருவதால் குஷியான AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் நிறுவனர் மற்றும் இயக்குநர் அஷ்வின் மாரிமுத்து ஆகியோர் அடுத்த மூன்று வருடத்தில் எடுக்க போகும் படத்திற்கும், இப்பொழுதே எங்களுக்கு கால் ஷீட் கொடுங்க பிரதீப் என கூறி அடுத்த அப்டேட்டையும் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பயம் இருக்கனும் சாமி... படத்துக்கே இத்தனை கோடி செலவுன்னா...வசூல் எத்தனை கோடியா இருக்கும்..!

டிராகன் படத்தை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது நடிகர் சிம்புவிடம் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். நடிகர் சிலம்பரசன் நீண்ட நாட்களுக்கு பின் கம்பேக் கொடுத்த "மாநாடு" படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதே சமயம் அடுத்தடுத்து படமான 'வெந்து தணிந்தது காடு' மற்றும் 'பத்து தல' போன்ற படங்கள் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத சிம்பு, படம் மட்டும் அல்லாது பிரதீப் ரங்கநாதன், ஹரிஷ்கல்யாண் போன்ற நடிகர்களின் படங்களுக்கு பாட்டு பாடி அசத்தியும் வருகிறார். அதிலும் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இணைந்து நடித்துள்ள "தக் லைஃப்" திரைப்படம் இந்தாண்டு வெளியாகி கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் ஆரவாரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் அஷ்வின் மாரிமுத்து இயக்கிய படம் அனைவருக்கும் பிடித்து போக கண்டிப்பாக சிம்பு அடுத்த படம் இவர் இயக்கத்தில் தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். இந்த சூழலில், சிம்பு பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கப் போவதாகவும், அதன் பின் தனது 50வது படத்தை தேசிங் பெரியசாமியும், தனது 51வது படத்தை "ஓ மை கடவுளே" மற்றும் "டிராகன்" படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்துவும் இயக்கப் போகிறார் என்றும் கூறி இருந்தார். இதனை நினைவு கூர்ந்த ரசிகர்கள், எந்த படமாக இருந்தாலும் பரவாயில்லை அவை அனைத்தையும் தள்ளிவைத்து விட்டு முதலில் அஷ்வத் மாரிமுத்துவின் "காட் ஆஃப் லவ்" படத்தில் நடிங்க, கண்டிப்பாக கோலிவுட்டில் விட்ட இடத்தை பிடித்து லிட்டில் சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பீங்க என கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர்.
இதனால் சற்று குழப்பத்தில் சிம்பு இருப்பதாகவும், எங்க தலைவருக்கு நாங்க தான் முக்கியம் கண்டிப்பாக நாங்க சொன்னதை தான் செய்வார் என பிடிவாதத்தில் ரசிகர்களும் இருப்பதால் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஊரே எதிர்த்த படம் செம ஹிட்டு.. ஹீரோக்கு தங்க செயினை பரிசாக கொடுத்த ப்ரொடியூஸர்..!