சமீபத்தில் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் அன்று ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள "மதராஸி"படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் டைட்டில் கிளிம்ப்ஸ் ஆகியவை வெளியானது. அதே போல் அன்றைய தினமே சூரரைப் போற்று' படத்தில் மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'பராசக்தி' படப்பிடிப்புத் தளம் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இப்படி நடிகர் விஜய் அரசியலுக்கு செல்லும் சூழ்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இதனை தொடர்ந்து தற்பொழுது சிவா கையில் மதராஸி மற்றும் பராசக்தி என இரண்டு படங்கள் உள்ளது. மேலும் பல படங்கள் நடிக்க நிலுவையில் உள்ள நிலையில் அவரது அடுத்த படத்தை பிரபல இயக்குநர் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் கொடுத்த பிரியாணி..! சாப்பிட்டவர்கள் கூறிய அந்த வார்த்தை..! இப்படி ஆயிடுச்சே..!

எந்த படமாக இருந்தாலும் அதனை தன் பாணியில் எடுத்து ஹிட் கொடுப்பவர் அட்லீ. இவர் இயக்கிய எந்த படமும் இதுவரை தோல்வி அடைந்தது இல்லை. அட்லீயின் முதல் படம் "ராஜா ராணி" .ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நஜிம் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யராஜ், சந்தானம், சத்யன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அட்லீக்கு ரசிகர்களை சம்பாரித்து கொடுத்தது.

இரண்டாவதாக, கலைப்புலி எசு.தாணு விஜய் தயாரிப்பில், அட்லீ இயக்கியத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடிப்பில் உருவான திரைப்படம் "தெறி". இப்படம் பயங்கர ஹிட் கொடுத்தது.

மூன்றாவதாக, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லீயின் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெறித்தனமான இசையில் விஜய், காஜல் அகர்வால், எஸ். ஜே. சூர்யா, வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், கோவை சரளா, ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல்.

நான்காவதாக, கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிபில், அட்லீ இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இசையில், விஜய், நயன்தாரா, விவேக், ஜாக்கி செராப், கதிர், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "பிகில்".

அடுத்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து ஹிட் கொடுத்த திரைப்படம் "ஜவான்". அதனை தொடர்ந்து, தற்போது தன்னுடைய தெறி படத்தை "பேபி ஜான்" என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டு உள்ளார். அந்த படமும் நல்ல ஹிட் கொடுத்துள்ளது. ஏற்கனவே இயக்குநர் அட்லீ, தனது முதல் படமான "முகப்புத்தகம்" என்ற குறும்படத்தில் கதாநாயகனாக சிவர்கார்த்திகேயனை வைத்து எடுத்து இருப்பார். இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் அடுத்த படத்திற்காக பேசியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் கண்டிப்பாக விஜயை வைத்து ஹிட் கொடுத்தவர் சிவகார்த்திகேயனை வைத்து மாஸ் ஹிட் கொடுப்பார் என பேசி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை சைட் அடித்த ஆர்த்தி... க்யூட் லுக்கில் சிவாவுக்கு வலைவீச்சு...!