தமிழ் பெண்களை மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் இருக்கும் பெண்களிடம், உங்களுக்கு எந்த மாதிரி கணவன் வர வேண்டும் என கேட்டால் உடனே அனைவரது வாயில் இருந்து வரும் ஒரே வார்த்தை, 'நடிகர் சூர்யாவை' போல தான் எனக்கு கணவன் வேண்டும் என்பர், அந்த அளவிற்கு சூர்யா அழகிலும் நடிப்பிலும் பெயர்போன நடிகர். இவரது நடிப்பில் பல படங்கள் வந்தாலும், இந்த நிலைக்கு வர, அவரது கடின உழைப்பே காரணம் எனலாம்.

தனது தந்தை சிவகுமார் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவரது முகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள நிறைய உழைத்து இருக்கிறார். உதாரணத்திற்கு சூர்யாவின் நடிப்பில் பிரமாண்டமான படம் என தற்பொழுது வரை பலராலும் கூறப்படும் படம் என்றால் அது "பிதாமகன்" தான். அந்த படத்தில் சூர்யா தனது நடிப்பை அசத்தலாக வெளிக்காட்டி இருப்பார். இப்படி இருக்க, இவரது பெயர் சூர்யா கிடையாது இவரது உண்மையான பெயர் சரவணன்.
இதையும் படிங்க: சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்ட வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான வடிவேலு...!

நடிகர் சூர்யா 1997-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான "நேருக்கு நேர்" திரைப்படத்தில் விஜயுடன் துணை நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தனது காதல் மனைவியான ஜோதிகாவுடன் 1999-ம் ஆண்டு "பூவெல்லாம் கேட்டுப்பார்" என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின், நந்தா, பிரெண்ட்ஸ், உன்னை நினைத்து, போன்ற படங்களில் பிரபலமாக ஆரம்பித்து, வரிசையாக காக்க காக்க, பிதாமகன், கஜினி, அயன், சிங்கம், சூரரைபோற்று, அஞ்சான் என இன்று பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார். திரைப்படம் மட்டும் அல்லாது, இதுவரை, டிவிஎஸ் மோட்டார்ஸ், ஏர்செல், சன்பீஸ்ட், சரவணா ஸ்டோர்ஸ், பாரதி சிமெண்ட்ஸ் மற்றும் இமாமி நவரத்தினா தயாரிப்பு, க்ளோஸ் அப், மலபார் கோல்ட் முதலான விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா.

இப்படி இருக்க, இவர் நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்த படமாக இருந்தாலும், அப்படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு அடுத்த படத்தில் பணம் வாங்காமல் நடிப்பதாக கூறி உதவி செய்து இருக்கிறார். இப்படி இருக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா "ரெட்ரோ" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கும் சூழலில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை வண்டலூர் அருகே நடைபெற்று, தற்பொழுது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், இப்படத்தில் வக்கீல் மற்றும் அய்யனார் என இருவேடங்களில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அஞ்சான் படத்தில் நடிகர் சூர்யா இரு வேடத்திலும், அடுத்து டைம் வாட்ச் வைத்திருக்கும் "24" என்ற படத்திலும் இரு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பதால் இப்படத்தில் கண்டிப்பாக சூர்யா மாஸ் காட்டுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரியல் நண்பேன்டா..! சந்தானத்தை ஹீரோவாக்கி படம் தயாரிக்கும் ஆர்யா.. முதல் பாடலுக்கு டீசர் வெளியிட்டு அதகளம்..!!