தமிழ் திரையுலகம் மட்டும் அல்லாது ஹாலிவுட் வரையிலும் உள்ள அனைத்து ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதுண்டு, தங்கள் ஆரோக்கியத்திலும் உடல் வடிவமைப்பிலும் முக்கியம் காட்டுவதுண்டு. ஏனெனில் அவர்கள் தங்களை பொலிவுடன் வைத்து கொண்டால் தான் திரையில் பொலிவுடன் இருக்க முடியும், ரசிகர்கள் மனதிலும் பொலிவாக குடியிருக்க முடியும். இதனால் தினமும் உடற்பயிற்சி செய்து அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பதிவிட்டு வருவர்.

அதே போல், திரை துறையில் முதலில் இரட்டை குழந்தை வைத்து அவர்கள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர். இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியரான சினேகன் மற்றும் அவரது காதல் மனைவி கன்னிகாவிற்கும் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் இரட்டை குழந்தை பிறந்து அனைவரது ஆசிர்வாதத்தையும் அன்பையும் பெற்று உள்ளனர்.
இதையும் படிங்க: "அழகோ அழகு அவள் கண் அழகு".. போட்டோக்களில் மனதை கொள்ளை கொள்ளும் மிருணாளினி ரவி ...!

இந்த நிலையில், அரசியல், கதை, கதாநாயகன், பாடலாசிரியர் என பல பரிமாணங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் சினேகன் கடந்த ஆண்டு தன்னுடைய மனைவி கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியாக குறிப்பிட்டு இருந்தார் . இதனை தொடர்ந்து கன்னிகாவின் வளைகாப்பு, நாட்கள் செல்ல கன்னிகாவின் ஆரோக்கியத்தில் சினேகன் எடுத்த முயற்சி என பல நிகழ்வுகள் சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகி, சினேகன் கன்னிகாவுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க, ரசிகர்கள் கடவுளை வேண்டும் அளவிற்கு மாறியது.

இந்த சூழலில், பலரது வேண்டுதலுக்கு பலனாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அழகான இரு பெண் குழந்தைகளுக்கு தாயானார் கன்னிகா. இரு பெண் குழந்தைகளுக்கு தன்னை தகப்பனாக்கிய கன்னிகாவிற்கு "ஐபோனை" பரிசளித்தார் அவரது கணவர் சினேகன்.
இந்த நிலையில், குழந்தைகள் பிறந்த சில நாட்களிலேயே மீண்டும் ஒர்கவுட்டுக்கு திரும்பியுள்ளார் கன்னிகா. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள அவர், காலையில் எழுந்து வொர்க் அவுட்டிற்கான உடை, ஷு உள்ளிட்டவற்றை அணிந்துக் கொண்டு இடைவிடாமல் ஒர்க்கவுட் செய்வதாகவும், தனக்கு அசதியாக இருக்கும் என தனது அன்பு கணவர் சினேகன், தினமும் காபியுடன் தன்னை எதிர்கொள்வதாகவும் கன்னிகா வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

மேலும், இருவரும் காபியை சுவைக்கும் அந்த வீடியோவில், தன்னுடைய காதல் மனைவிக்கு சினேகன் நெற்றியில் முத்தம் கொடுக்கும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளது. இதனை பார்க்கும் பல ரசிகர்கள் அவர்களை வாழ்த்தி வருகினறனர்.
சில இல்லாதரசிகள் சினேகனை பார்த்து கற்று கொள்ளுங்கள் என கூறுவதால் கன்னிகாவை போல் நீங்களும் ஒர்க்கவுட் செய்யுங்கள் என பல குடும்பங்களில் தம்பதியர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹாரர் பாத்தாச்சு... அடுத்து திரில்லர்..! கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் செல்லும் நடிகை..!