பொதுவாகவே விசேஷ நாட்களை சிறப்பிக்கும் விதமாக நடிகைகள் அதற்கேற்ப அலங்காரம் செய்து போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம்.

அதே போல், ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, அங்கு எடுக்கும் புகைப்படங்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: Sivakarthikeyan: மூன்று குழந்தைகளுடன் சிவகார்த்திகேயன் கொண்டாடிய பொங்கலோ பொங்கல்! வைரலாகும் குடும்ப புகைப்படம்!
அந்த வகையில் நடிகை மீனா, விஜய் டிவியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் எடுத்து கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் விஜய் டிவி. பொங்கல் ஸ்பெஷலாக 'சபாஷ் சரியான போட்டி' என்கிற எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் இரு அணியாக பிரிந்து மோதினர். இதில் ஏராளமான விஜய் டிவி சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு மீனா மஞ்சள் நிற காஞ்சிபுர பட்டுப்புடவையில்... கழுத்து நிறைய நகையுடன் வந்திருந்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பொங்கல் பானை மற்றும் கரும்பு அருகே நின்று கலக்கலாக இவர் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீனாவுக்கு அவரது 43-வருட சினிமா கேரியரை சிறப்பிக்கும் விதமாக நினைவு பரிசு ஒன்றும் வழங்க பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாட்டிய வறுமை... ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட சமந்தா..! நம்பியாராய் மாறிய கதை..!