கன்னட திரையுலகில் Ondh Kathe Hella என்கிற திரைப்படத்தின் மூலம் 2019-ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் தான் பிரியங்கா அருள் மோகன்.

பின்னர் அதே ஆண்டு தெலுங்கில், நானி ஹீரோவாக நடித்த, 'கேங் லீடர்' படத்தில் கதாநாயகியாக மாறினார். இந்த படத்தின் வெற்றி பிரியங்கா மோகனுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று தந்தது.
\தமிழில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இதை தொடர்ந்து, சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவர், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் போன்ற படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: சினேகா கேட்ட கேள்வி மணிமேகலை சொன்ன பதில் - எதிர்பார்ப்பை கூட்டும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ப்ரோமோ !
அதே போல் தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் மற்றும் ஜெயம் ரவியுடன் 'பிரதர்' ஆகிய படங்களிலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ள, 'OG'திரைப்படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆரஞ்சு நிற சேலையில், குத்து விளக்கு பக்கத்தில் அமர்ந்தபடி போட்டோஸ் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...

இதையும் படிங்க: கமல்ஹாசனின் ரீல் மகளா இது? கவர்ச்சியில் உச்சம் தொட்ட ஹாட் போட்டோஸ்!