அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனா ஹைடன். கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் பிரபலமான இவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும் ‘ஸ்மோக் என்ற வெப் சீரிஸ் மூலம் டைரக்சன் பயணத்தையும் தொடங்கியுள்ளார்.
ஷார்ட்பிளிக்ஸ் OTT கூட்டணியில் தனது யுனிக் புரொடக்சன் Fly High production நிறுவனம் சார்பில் இந்த வெப் சீரிஸை தயாரித்திருப்பதுடன் இதற்கான கதையையும் அவரே எழுதியுள்ளார். இந்த வெப் சீரிஸ் தயாரிப்பில் தனக்கு ஏற்பட்ட கடுமையான, கசப்பான அனுபவங்கள், எதிர்ப்புகள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், “பிரச்சினைகளே வேண்டாம் என்று தான் ஒதுங்கி இருந்தேன். ஆனால் நீ என்ன செய்தாலும் உன்னை அடிப்போம் என்ற விதமாக, நான் ஒரு ப்ராஜெக்டை தொடங்கியதுமே எதிர்க்கிறார்கள். பயோபிக் என ஆரம்பித்ததுமே ஒரு ஆள், இரண்டு ஆள் இல்லை, ஒரு கும்பலே வந்து நிற்கிறார்கள். எனக்கு தெரிந்த நடிகர், தயாரிப்பாளர் கூட என்னிடம் கடுமை காட்டியது ஏன் என்று தெரியவில்லை. என் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த போது எனக்குள் அவ்வளவு பயம் இருந்தது.

அதன் பிறகும் தொடர்ந்து என் மீதான தாக்குதல் நடக்கிறது. நான் எவ்வளவு ஒதுங்கிப் போனாலும் என்னை அடிக்கிறீர்கள் என்றால் இனி நான் பேசினால் என்ன ஆகிவிடப் போகிறது என்ற தைரியம் வந்துவிட்டது. இந்தப் புராஜெக்ட்டை நான் கையில் எடுத்திருப்பது பழிவாங்குவதற்கான எண்ணம் கிடையாது. அதனால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தை மனதில் கொண்டு அவர்களின் பெயர்களை நான் இதில் சொல்ல விரும்பவில்லை. நான் எப்போதும் திறந்த மனதுடன் எதையும் பேசுபவள். எதையும் மனதில் வைத்துக் கொள்ள தெரியாது.
இதையும் படிங்க: யாருங்க இந்த அர்ஷியா லட்சுமணன்... சுழல்-2 தொடரில் அசத்தும் கருநிற பேரழகி..!
எனக்கு மட்டுமே என பணத்தை வைத்துக்கொள்ள தெரிந்திருந்தால் இந்நேரம் 200 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் இருந்திருப்பேன். எனக்கு தெரிந்த சினிமாவை செய்து அதன் மூலம் வளர நினைத்தேன். நான் செய்த சில சின்ன தவறுகள் இருந்தாலும் அதை திருத்திக் கொண்டு எல்லோருக்கும் உண்மையான வாழ்க்கை வாழ்வதை காட்ட நினைத்தேன். ஆனால் அதுவே தப்பாக போய்விட்டது. ஒருவேளை போலியாக இருந்திருந்தால் நான் நன்றாக இருந்திருப்பேனா என்று எனக்கே தெரியவில்லை. கனிமொழி படத்தில் மூலம் நான் இழந்தது என்னுடைய பணம். அதற்கு யாரையும் நான் குறை சொல்ல தயார் இல்லை. அது என் தவறு. ஆனால் இந்த முறை ஓடிடி தளத்திலிருந்து பணம் பெற்று இந்த புராஜெக்டை தொடங்கினேன்.

நான் ஆரம்பத்தில் வெளியிட்ட இந்த படத்தின் டீசர் கூட நான் உண்மையைத்தான் சொல்லப் போகிறேன் என்பதை உணர்த்துவதற்காக தான். நெட்பிளிக்ஸ் உடன் ஒப்பிடும்போது ஷார்ட்பிளிக்ஸ் சிறிய OTT தளம் தான் என்றாலும் அவர்கள் கொடுத்த ஆத்மார்த்த ஆதரவுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் இதை செய்யாதே, அதை செய்யாதே என்று எதிர்ப்பு வரும் போது நான் என்னதான் செய்வது ? நான் என்ன அப்படி தப்பான ஆளா என்கிற விரக்தி தான் ஏற்பட்டது.
முதல் பத்து நாட்கள் நடத்தி முடித்துவிட்டு மீதி நான்கு நாட்கள் படப்பிடிப்பை நடத்த ஆறு மாதம் பிச்சை எடுத்தேன். இந்த படத்தில் டீனேஜில் இருந்து 30 வயது வரையிலான எனது கதாபாத்திரங்கள் நான்கு பருவங்களாக இடம் பெற்று இருக்கும். நான் உதவி இயக்குநராக வேலை பார்க்க கிட்டத்தட்ட எட்டு இயக்குநர்களை அணுகினேன். ஆனால் அவர்களோ நீங்கள் பார்க்க நன்றாக இருக்கிறீர்கள் கவர்ச்சியான பெண்ணாகவும் இருக்கிறீர்கள்.. நான் உங்களை பார்ப்பேனா ? பாதுகாப்பேனா ? என்னுடைய படவேலையை பார்ப்பேனா என்று கேட்டார்கள். அதனால் விட்டு விட்டேன் என்றார்.
இதையும் படிங்க: சிகரெட் பிடிக்கும் ஜோதிகா...சூர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!!