40 வயசிலும் 20 வயசு யங் லுக்கில் அழகு தேவதை போல் ஜொலிக்கும் நடிகை த்ரிஷா தற்போது பர்பிள் நிற உடையில் எடுத்து கொண்ட போட்டோஸ் ஷூட் தான், இன்று சோசியல் மீடியாவை திணறடித்து வருகிறது.

'மௌனம் பேசியதே' படத்தில், ஹீரோயினாக அறிமுகமானபோது... நடிகை த்ரிஷா 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவை ஒரு ஹீரோயினாக கட்டி ஆளுவார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க: காசுக்காக பொய் சொல்கிறாரா திரிஷா?
ஆனால் த்ரிஷாவின் கதை தேர்வு, தன்னை நாளுக்கு நாள் திரையுலகில் நிலைநிறுத்தி கொண்ட விதம் தான் இன்று வரை பல முன்னணி நடிகர்கள் ஜோடி போடும் அளவுக்கு இவரை உயர்த்தி உள்ளது.

இடையில் ஒரு 5 வருடம் த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்த போதும், இவருக்கான மவுசு குறையவில்லை. 3 வருடம் இயக்குனர் மணிரத்னம் படத்திற்காக த்ரிஷா செய்த தியாகமும் வீண் போகவில்லை. ஆம் த்ரிஷா மீண்டும் திரையுலகில் எழுச்சி பெற உதவியது 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் தான்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லீ என அம்மணியின் கைவசம் இருந்தது எல்லாமே டாப் ஹீரோஸ் படங்கள் மட்டுமே.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்திலும் நடித்துள்ளார். கைவசம் சுமார் அரை டஜன் படங்களும் உள்ளன.

இந்நிலையில் த்ரிஷா பர்பிள் நிற, கோட் சூட்டில் செம்ம ஸ்டைலிஷாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'விடாமுயற்சி' யாரும் பார்த்திடாத த்ரிஷாவின் BTS போட்டோஸ்!