மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா லட்சுமி விஷால் - சுந்தர் சி காம்போவில் வெளியான ஆக்க்ஷன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

இதையும் படிங்க: கண்ணே பட்டுடும்.. கணவர் ஆண்டனி தட்டிலுடன் கீர்த்தி சுரேஷ் கொண்டாடிய தல பொங்கல் போட்டோஸ்!
இந்த படம் டிஸ்சாஸ்டர் தோல்வியை சந்தித்த நிலையில், தன்னுடைய இரண்டாவது படத்தில் தனுஷுக்கு ஜோடி போட்டார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் - ஐஸ்வர்யா லட்சுமி நடித்த இந்த ' ஜகமே தந்திரம்' படமும் சரியாக போகவில்லை.

ஆனால் தமிழில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது, மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'பொன்னியின் செல்வன்' படம் தான்.

இந்த படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி சமுத்திர குமாரி என்கிற வேடத்தில் நடித்திருந்தார்.

பூங்குழலி என்பது இவரின் கதாபாத்திர பெயர் என்றாலும்... படகோட்டி பெண் என்பதால், சமுத்திர குமாரி என்று இவரை கல்கி வர்ணித்திருப்பார்.

தற்போது தமிழ் - மலையாளம் என இரு மொழிகளும் படு பிஸியான ஹீரோயினாக மாறியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைப் மற்றும் ஒரு தெலுங்கு படம் ஆகியவை இவரின் கைவசம் உள்ளது. இதை தவிர சூர்யா நடிக்கும் வாடி வாசல் படத்திலும், ஐஸ்வர்யா லட்சுமி தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: செண்டிமெண்ட் டச்சுடன்... நயன்தாரா குடும்பத்துடன் கொண்டாடிய பொங்கல்! வைரல் போட்டோஸ்!