அல்லு அர்ஜூன் விவகாரம் ஹைதராபாத்தில் ஓய்ந்தபாடில்லை. முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த விவகாரத்தில் கடுமையான போக்கை அல்லு அர்ஜூனுக்கு எதிராக கையாண்டு வருகிறார். பதிலுக்கு அல்லு அரவிந்த் பிரஸ் மீட் நடத்தி விளக்கமளிப்பதும், ஜாமீனில் வெளி வந்த பிறகு போலீஸ் வீசாரணைக்கு அழைப்பதுமாக நாள் தோறும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இதில் அரசியலும் கலந்து போய்விட அக்கட தேசத்தில் ஒரே அதகளம்.
இந்நிலையில், ‘‘முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை விமர்சித்தால் அல்லு அர்ஜூன் படத்தை ஓடவிட மாட்டோம்’’ என தெலங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏ., பூபதி ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது விவகாரத்தை விசாலமாக்கி இருக்கிறது.

நாளுக்கு நாள் அல்லு அர்ஜூன் நெருக்கடியில் சிக்கி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீட்டை அறித்து இருக்கிறது புஷ்பா 2 படக்குழு.
இதையும் படிங்க: 'கை, கால், கிட்னி ஏதாவது போச்சா..?' ஒரே நாளில் சிதைத்து விட்ட முதல்வர்..! கொன்னுட்டீங்களே சார்... அல்லு அர்ஜூன் வேதனை
நேற்று அல்லு விசாரணைக்காக சிக்கடப்பள்ளி ஸ்டேஷனுக்கு அழைக்கப்பட்டார். இதற்கு முன் அல்லு அர்ஜுனும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
அப்போது தன்னை நிரபராதி என்றும், இந்த வழக்கில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுவதாகவும் வருத்தப்பட்டிருந்தார். அல்லு அர்ஜுனும், அவரது குடும்பத்தினர், புஷ்பா 2 தயாரிப்பு குழுவினரும் சந்தியா தியேட்டர் நெரிசலில் பலியான பெண்ணின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் ஷ்ரேதேஜ் சிகிச்சை குறித்தும் அவ்வப்போது கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில், அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த். புஷ்பா- 2 படத்தின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 படத்தின் ஒட்டுமொத்த குழுவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் இருக்கிறோம்’’ எனவும் தெரிவித்துள்ளார். எல்லா வகையிலும் உதவ தயாராக இருப்பதாக கூறும் அல்லு அரவிந்த் தரப்பு சந்தியா தியேட்டருக்கு வெளியே காயம் அடைந்த 9 வயது சிறுவன் ஸ்ரீதேஜுக்கு ரூ.2 கோடி வழங்கப்படும். இதில் 1 கோடியை அல்லு அர்ஜுன் வழங்குகிறார். புஷ்பா- 2 படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தலா ரூ.50 லட்சம் வழங்குவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு ஏற்கெனவே 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் ஸ்ரீதேஜ் தற்போது வென்டிலேட்டரில் உள்ளார். கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் குறித்து சமீபத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு அல்லு அர்ஜுன் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் அவரை மேலும் விசாரணைக்கு அழைக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நடிகை நக்மாவும்... 4 காதலர்களும்... நுகர நுகர வாசனை... 50 வயதில் தனிமையில் யோசனை..!