விஜய் டிவியில் 10-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், இதில் ஒரு சில சீரியல்களுக்கு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில், 2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு சுமார் 3வருடங்களுக்கு மேல் ஓடிய முக்கியமான சீரியல் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் ரோஷ்ணி ஹரிபிரியன் கதாநாயகியாக நடிக்க, இரண்டாவது நாயகியாக கண்மணி மனோகரன் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருண் பிரசாத் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: சாமுண்டீஸ்வரி சொன்ன வாரத்தை.. ஏமாற்றத்தில் பரமேஸ்வரி பாட்டி - கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!
இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த தொடரில் இவர்களை தவிர அகிலன், ரூபா ஸ்ரீ, பரினா அசாத், போன்ற பலர் நடித்தனர்.

ஒரு கட்டத்தில் ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து வந்த ரோஷ்ணி வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடிக்க கமிட் ஆனார். அதே போல் வில்லி ரோலில்... இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்த கண்மணி மனோகரனும், 'அமுதாவும் அன்னமும்' சீரியலில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு தாவினார்.

திருமணத்துக்கு பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'மகாநதி' சீரியலில் கண்மணி மனோகரன் கமிட் ஆன நிலையில், ஒரே மாதத்தில் விலகினார். வேறு சீரியலில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இவர் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த ரகசியத்தை வெளிப்படுத்தி உள்ளனர். வெளிநாட்டில் தன்னுடைய கணவர் அஸ்வத்துடன் இணைந்து கண்மணி, கர்ப்பமாக இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம், சன் டிவி தொகுப்பாளர் அஸ்வந்த்தை காதலித்து கண்மணி திருமணம் செய்து கொண்டார். பிரபலங்கள் பெரும்பாலும் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடும் நிலையில், கண்மணி திருமணம் ஆன 6 மாதத்தில் குட் நியூஸ் சொன்னதை தொடர்ந்து, இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: குடோனுக்குள் அடைக்கப்படும் சாமுண்டேஸ்வரி.. கல்யாணத்தை நிறுத்திய ரேவதி - கார்த்திகை தீபம் அப்டேட்!