வட இந்தியாவில் ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிய நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியட்நாம் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்தப் பயணம் குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் இது தொடர்பாக கூறுகையில், “ஆங்கிலப் புத்தாண்டின்போது ராகுல் காந்தி வியட்நாம் சென்றிருந்தார். தற்போது ஹோலி பண்டிகையின்போதும் ராகுல் வியட்நாம் சென்றுள்ளதாகக் கேள்விப்பட்டேன். அவர் தன்னுடைய தொகுதியைவிட வியட்நாமில் அதிக நேரம் செலவிடுகிறார். வியட்நாம் மீதான பாசம் குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்ல பாப்கார்ன், இப்போ டோனட்.. ஜிஎஸ்டி வரி குறித்து காங்கிரஸ் கிண்டல்..!

இதுபோல பாஜக ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மாளவியா தன்னுடைய எக்ஸ் தளத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். அதில்,"மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முக்கியமான பதவியில் ராகுல் காந்தி உள்ளார். ஆனால், அவர் ரகசியமாக அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணம் செய்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவரது பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த டிசம்பர் 26இல் காலமானார். இதையடுத்து, அவருடைய மரணத்துக்கு ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜனவரி 1 புத்தாண்டு அன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியட்நாம் சென்றிருந்தார். “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்ததற்காக நாடே துயரத்தில் இருக்கும்போது, ராகுல் காந்தி புத்தாண்டை கொண்டாட வியட்நாம் சென்றுள்ளார்” என பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிபிஐ(எம்)-ல் இணைகிறார் சசிதரூர்..? உண்மையை உடைத்த பிரகாஷ் காரத்..!