விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரும் நிலையில் படம் அந்த அளவிற்கு நன்றாக ஓடவில்லை என தயாரிப்பு நிறுவனம் கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிபில், மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில், அஜித் குமார், திரிசா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் பிப்ரவரி 6 அன்று வெளியான திரைப்படம் தான்"விடாமுயற்சி".

ரசிகர்களின் பல வருஷ கேள்விகளுக்கும் குமுறல்களுக்கும் கிடைத்த வெற்றியாக இந்த விடாமுயற்சி படம் பார்க்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் படத்தின் தலைப்புக்கு ஏற்ப, நடிகர் அஜித் குமார் காரை வைத்து ஸ்டண்ட் செய்த காட்சிகள் இணையத்தில் பரவி படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது.
இதையும் படிங்க: ஆத்தாடி...! அஜித் போட்டிருக்கும் இந்த சட்டையின் விலை இவ்வளவா?... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் 3 அன்று "விடாமுயற்சி" திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் படத்தை கொண்டாடிய ரசிகர்கள், ஓடிடியிலும் இப்படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். இப்படி இருக்க படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான ஒரே நாளில் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளது என்ற செய்திகள் பரவ ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த நிலையில், இப்படம் வெளியாகி உலகளவில் இதுவரை ரூ.170 கோடி வசூல் செய்ததாக கூறப்படும் சூழலில், லைகா நிறுவனம் அதனை மறுத்துள்ளது. படம் வசூல் ஆனது ரூ.170 கோடி தான் ஆனால் படத்திற்கான செலவு ரூ.298 கோடி என கூறி இருக்கின்றனர். இதில் லைகா நிறுவும் போட்ட லிஸ்ட் தான் ஷாக்கே. அவைகள், இப்படத்தில் அஜித்திற்கு சம்பளம் மட்டுமே ரூ.105 கோடி, த்ரிஷாவுக்கு சம்பளம் ரூ.5 கோடி, அர்ஜுனுக்கு சம்பளம் ரூ.7 கோடி, மகிழ் திருமேனிக்கு சம்பளம் ரூ.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் ரைட்ஸ் ரூ.70 கோடி, சேட்டிலைட் ரைட்ஸ் ரூ.30 கோடி, ஆடியோ ரைட்ஸ் ரூ.15 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி அனைவருக்கும் செட்டில்மென்ட் மட்டுமே ரூ.156 கோடி நடந்துள்ளது. கூட்டி கழித்து பார்க்கும் பொழுது விடாமுயற்சி படம் ரூ.170 கோடி தான் வசூலாகி உள்ளது, மொத்தமாக லைக்காவிற்கு 128 கோடி நஷ்டம் என கூறியுள்ளனர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் சூர்யாவை தொடர்ந்து அஜித்தும் இப்படி செய்தால் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்டு தான் செல்ல வேண்டும் என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: குட் பேட் அக்லியில் இதை கவனிச்சீங்களா.. தலை சுத்த வைத்த அஜித்!!