தமிழ் திரையுலகில் பாடகியாகவும் நல்ல நடிகையாகவும், கவர்ச்சி நடன நடிகையாகவும் மக்கள் மனதில் என்றும் இருப்பவர் என்றால் அது ஆண்ட்ரியா தான். அந்த அளவிற்கு பாடலாலும் நடிப்பாலும் மக்களை கவர்ந்து இன்று அளவும் தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்து உள்ளார்.

மக்களால் ஆண்ட்ரியா என்று அழைக்கப்படும் இவரது முழு பெயர் ஆண்ட்ரியா ஜெறேமியா.சென்னையை சேர்ந்த இவர், தன்னுடைய சிறுவயது முதல் "யங் இசுடார்சு" என்னும் குழுவில் பாடி வந்தார்.அதன் பின் நடிப்பிலும் ஆர்வம் காட்டிய ஆண்ட்ரியா,கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: மாஸ்டர் பட போஸ்டரை திருடிய கவின்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள படக்குழு..!

பின்னர், கல்லூரி படிப்பை முடித்த ஆண்ட்ரியாவுக்கு திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் கிடைத்தது. அதில் பின்னணி பாடகராக அறிமுகமான இவர், தொரடர்ந்து கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், போன்ற படங்களில் பாடினார். பின் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கொண்டது.

அதன் பின், செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். பின், 2011-ம் ஆண்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில், வெளியான "மங்காத்தா" திரைப்படத்திலும் நடித்தார். இவர், கமல்ஹாசனுடன், நடித்த "விஸ்வரூபம்" திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது, அதில் கமல்ஹாசனுடன் இவர் ஆடிய பரதத்தையும் மறக்க முடியாது. அதன் பின், வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான "வட சென்னை" திரைப்படத்திலும் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிக்காட்டினார்.

இப்படி இருக்க தனது சமூக வலைதளப்பகுதியில் அவ்வப்போது புகைப்படத்தை பகிர்ந்து வரும் ஆண்ட்ரியாவின் அடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்பொழுது வெளியாக இருக்கும் கவினின் மாஸ்க் திரைப்படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாஸ்டர் பட போஸ்டரை திருடிய கவின்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள படக்குழு..!