உணவு டெலிவரி கம்பெனிகளும், ஸ்நாக்ஸ் டெலிவரி கம்பெனிகளும் தொடங்கி நல்லபடியாக வருமானம் பார்த்து வர காரணம் சோம்பேறிகள் தான். அவர்களது சோம்பேறி தனம் தான் எங்கள் முதலீடு, அவர்களது ஈடுபாடுதான் எங்கள் வருமானம் என இந்நிறுவனங்களின் தொழிலதிபர்கள் கூறிவருவதை பார்த்து இருப்போம். அதே போல் தான் புறணி பேசுவதையும், சீரியல்களில் பல குடும்பங்களின் பிரச்சனைகளையும், செய்திகளில் குடும்ப பிரச்சனைகளையும், கிசு கிசுக்களையும் தேடி தேடி பார்ப்பவர்களுக்காக கொண்டுவரப்பட்ட உன்னதமான நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.

உலகில் அனைத்து இல்லங்கள் முதல் இறுதியாத்திரை வரை, என்ன...என்ன...பிரச்சனைகள் நடக்கிறதோ..அதேபோல் காதல் முதல் பிரிவு வரை என அனைத்தையும் ஒரே நிகழ்ச்சியின் மூலமாக 100 நாட்கள் காண்பித்து, பலரது வாழ்க்கையை நல்லபடியாகவும் சிலரது வாழ்க்கையை கேள்விக்குறியாகவும் மாற்றி பல யுடியூபர்களை வாழவைக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இதையும் படிங்க: ரசிகர்களை கவர வைத்த கவர்ச்சி புகைப்படம்... பூர்ணிமாவின் போட்டோவால் மதி மயங்கிய ரசிகர்கள்...!

இந்த நிகழ்ச்சி, தமிழில் மட்டும் அல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி முதலான மொழிகளில் பல சீசன்களாக வெளிவந்து மக்களை என்டர்டைன்மெண்ட் செய்து வருகிறது. அந்த வரிசையில் தமிழில் பார்த்தால் இதுவரை எட்டு சீசன்கள் முடிந்து உள்ளன. அதில் பிக்பாஸ் முதல் சீசனில் 'ஆரவ்'ம், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகேன் ராவ்வும், நான்காவது சீசனில் ஆரி அர்ஜுனாவும், ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகனும், ஆறாவது சீசனில் முகமது அஷீனும், ஏழாவது சீசனில் அர்ச்சனா ரவிசந்திரனும், எட்டாவது சீசனில் முத்துக்குமரன் முதலானோர் வெற்றி பெற்று உள்ளனர்.

இப்படி பல போட்டியாளர்கள் வந்தாலும் அவர்களை போல தொகுப்பாளர்களும் மாறி வருகின்றனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்று முதல் ஏழு சீசன் வரை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். திடீரென இனி தான் பிக்பாஸில் தொடரப்போவதில்லை என்றார். அவரை தொடர்ந்து எட்டாவது சீசனில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இறங்கி ஒவ்வொரு வாரமும் சிக்ஸர் அடித்தார். அந்தளவிற்கு அவரது கௌண்டர் இருந்தது.

இப்படி தமிழ் பிக்பாஸிலே இவ்வளவு மாற்றங்கள் இருக்கும் பொழுது தெலுங்கிலும் மாற்றம் கொண்டுவராமல் இருந்தால் எப்படி. இதுவரை தெலுங்கில் அக்கினேனி நாகார்ஜுனா மட்டுமே சிங்கிளாக இருந்து பிக்பாஸ் 8 சீசன்களை தாங்கி பிடித்து கொண்டு சென்றார். இவரை தொடர்ந்து அனைவரும் தமிழ் பிக்பாஸை போல் தொகுப்பாளரில் மாற்றம் வேண்டும் என கேட்டதற்கு இணங்க, தற்பொழுது அடுத்து வரவிருக்கும் பிக்பாஸ் 9வது சீசன் நிகழ்ச்சியில் டாப் இளம் நாயகனான விஜய் தேவரகொண்டா தொகுத்து வழங்கப்போவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் செய்திகள் கசிந்துள்ளது.

இதனை பார்த்த விஜய் தேவர் கொண்டா ரசிகர்கள் ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு என பாட்டு பாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இளசுகளை சுண்டி இழுத்த ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் புகைப்படங்கள்..! இணையத்தில் வைரல்..!