பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட பிரமாண்டமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். எல்லா மொழிகளிலும் மிகப்பெரிய பிரபலங்களை வைத்து இந்த நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் பிக் பாஸின் முதல் ஏழு பாகங்களையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி ஹிட் கொடுத்தார். இவரைத் தொடர்ந்து "பிக் பாஸ் சீசன் 8"யை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இறங்கி போட்டியாளர்களுக்கு தக் லைப் கொடுத்தார். விஜய் சேதுபதியின் ஒவ்வொரு பேச்சுக்களும் மக்களை நேரடியாக சென்றடைந்தது.

இந்த நிலையில், சீரியல்களில் நடக்கும் சண்டைகளையும், வெளியே நடக்கும் சண்டைகளையும் பார்க்கும் மக்களுக்கு விருந்தாக பிக்பாஸை கொண்டு வந்து அதனைப் பற்றியே பேசவைத்தது தனியார் தொலைக்காட்சி.
இதையும் படிங்க: கண்ட கனவு நினைவானது... தற்பொழுது ஓடிடியில் டிராகன்..! குஷியில் இளசுகள்..!

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகள் பல சீசன்களை கடந்து சென்றாலும், மக்களின் மனதில் ஆழமாக பதிந்த சீசன் என்றால் அது "வி ஆர் த பாய்ஸ்" என்று சொல்லும் கவின் மற்றும் சாண்டி முதலானோர் இருந்த சீசன் தான், மேலும் யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா முதலியானோரும் இருந்த சீசன் தான். அதனைத் தொடர்ந்து மாயா, பூர்ணிமா அர்ச்சனா, இவர்களது சீசனும் மக்களால் பெரிதும் பேசப்பட்டது. இவர்கள் அனைவரையும் தொடர்ந்து சீசன் 8ல், ஆண்களுக்காக களம் இறங்கும் கருத்து சிங்கம் என்று அனைவராலும் போற்றப்பட்டு வெற்றி கண்டவர் தான் பிக் பாஸ் 8ன் சாம்பியன் "முத்துக்குமரன்".

பிக் பாஸ் 8ல், முத்துக்குமரனுக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒத்து வராமல் போவது அதிகமாக இருக்கும். ஏனெனில் அடிக்கடி அவர் சொல்லும் கருத்துக்களுக்கு வீட்டில் எதிர்ப்புகள் அதிகம். அதேபோல் தனது ரியாக்ஷனாலும் குரலாலும் மக்களுடைய ஆதரவைப் பெற்றவர் சௌந்தர்யா. இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் சண்டை போடாத நாட்களே கிடையாது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகும் இருவரும் சண்டையிட்டு கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து முத்துக்குமரன் ஒரு பேட்டியில், சௌந்தர்யா பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கே தகுதியற்றவர். இருப்பினும் என்னுடைய கருத்து வெகுஜன மக்களின் கருத்தோடு வேறுபாடாக இருந்தது என்றும் அவர் விளையாட்டுக்கு தகுதி இல்லாதவர் என்பதால் தான் அவரை நான் நாமினேட் செய்தேன். எனவும் கூறி இருந்தார். இந்த செய்திகள் காட்டுதியாய் பரவ, சௌந்தர்யா இதற்கு பதில் தருவாரா என அனைவரும் காத்துக் கொண்டு இருந்தனர்.

அதற்கு ஏற்றார் போல் சௌந்தர்யா தனது எக்ஸ் தளத்தில், முத்துக்குமரனுக்கு பதிலளித்து உள்ளார். அதில் "பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் சிலர் என்னை "நாமினேட்" செய்து கொண்டே இருக்கிறார்கள்" என்று பதிவிட்டு உள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலரும், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் முத்துக்குமரனும் சௌந்தர்யாவும் இணைய வழி மூலமாக மக்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகிறார்கள் என்று கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் டீவி பிரபலம் ஆபிஸ் ஓபன் பண்ணிட்டாரா..! என்னவா இருக்கும்... குழப்பத்தில் ரசிகர்கள்..!