நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான "சலார்" திரைப்படம் அனைவருக்கும் தெரியும். இந்த படத்தில் நடிகர் பிரித்விராஜின் சிறு வயது தோற்றத்தில் இருக்கும் சிறுவனை யாராலும் மறக்க முடியாது. ஒவ்வொரு முறையும் கடிக்கத்துக்காக சண்டை போட்டு கொண்டு இருப்பார்கள். மேலும், தனது நண்பனான தேவாவுக்காக தனது மைன்சை விட்டு கொடுத்து வாழ்க்கை முழுவதும் தனது அப்பாவின் அன்பை இழந்து இருப்பான். அதில் வரதராஜ மன்னாராக இருக்கும் இந்த சிறுவனை பார்த்து "கடிகத்தை ஏன் டா தூக்கிப்போட்ட" என மன்னார் மிரட்ட அந்த சிறுவன் எதுவும் சொல்லாமல் பயந்தபடி நின்ற காட்சிகள் அனைவரையும் மகிழ செய்தது.

இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் அந்த சிறுவன் வந்தாலும் பலரது கவனத்தையும் பெற்றான் என்றே சொல்ல முடியும். அதே போல் தான் தற்பொழுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான எல்2 எம்பூரான் திரைப்படம் பல இக்காட்டான சூழ்நிலைகளின் மத்தியில் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.
இந்த படத்திலும் ஜூனியர் பிரித்விராஜ் ஆக நடித்து அசத்தி இருப்பவர் தான் கார்த்திகேயா தேவ். இப்படி இரண்டு அட்டகாசமான படத்தில் நடித்த இவர் தற்பொழுது இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித், திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியார், ரகுராம் உள்பட பல நடிகர்கள் நடித்த "குட் பேட் அக்லி" படத்தில் அஜித் மற்றும் திரிஷா தம்பதிக்கு மகனாக நடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கதாநாயகனாக களமிறங்கும் அர்ஜுன் தாஸ்.. நடிகை இந்த காந்த கண்ணழகியா..!

இவரது நடிப்பு அனைவருக்கும் பிடித்து போக இன்று பலராலும் போற்றப்பட்டு வருகிறார் கார்த்திகேயா தேவ். இந்த நிலையில், இப்படத்தின் அஜித்தின் மகன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் கார்த்திகேயா தேவ் இல்லையாம். கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'பிரேமலு' படத்தில் கதாநாயகனாக நடித்த 'நஸ்லேன்' தான் முதலில் இந்த கதாப்பாத்திரத்திற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சிலபல காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் 'ஆலப்புழா ஜிம்கானா' திரைப்படமும் இதே ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தை பார்த்த நஸ்லேன் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், "குட் பேட் அக்லியில் அஜித்தின் மகனாக நடிக்கும்படி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முதலில் என்னை தான் அணுகினார். உண்மையை சொன்னால் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு அது. ஆனாலும் அது பெரிய படம். இரண்டு ஷெட்யூலாக அதிக நாட்கள் எடுக்கப்பட இருந்தது. அந்த சமயத்தில் தான் 'ஆலப்புழா ஜிம்கானா' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தேன்.

அதனால் 'குட் பேட் அக்லி' படத்திற்கு என்னால் தேதிகள் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது. என்னை தேடி வந்த அஜித் பட வாய்ப்பை நான் மிஸ் பண்ணி விட்டேன் என்பது எனக்கு வருத்தமளிக்கிறது" என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அஜித் ரசிகர்களை சீண்டிய விஜய் ரசிகர்கள்..! வெளுத்து வாங்கிய AK ரசிகர்கள்..! குளிர் காய்ந்த ப்ளூ சட்டை..!