நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக தயார் நிலையில் இருக்கும் திரைப்படம் தான் "ரெட்ரோ". இந்த படம் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷன்கள் அதிகமாக வந்து கொண்டு இருப்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி நாட்டம் உண்டானது. இந்த சூழலில் தற்பொழுது வெளியான இப்படத்தின் ட்ரெயிலர் பலரது கவனத்தையும் ஈர்த்து வருவதுடன் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது என்றே சொல்லலாம்.

இயக்குனர் கார்த்திக்கு சுப்புராஜின் பிட்சா படம் முதல் தற்பொழுது வெளியான படங்கள் வரை தனித்துவத்தை காண்பிப்பதில் வல்லவர். அதுமட்டுமல்லாமல் இவரது படைப்பில் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படம் என்றால் நடிகர் ரஜினியை வைத்து இவர் இயக்கிய பேட்ட படம் தான். அதில் அழகான கேங்க்ஸ்டராக வந்த ரஜினி, வார்டனாக மாறி, தனது மருமகனுக்காக பழிதீர்க்க புறப்படுவார். அங்கு விஜய்சேதுபதியை வைத்தே சிங்காரத்தின் கதையை முடிப்பார். அட்டகாசமான இந்த படத்தில் லைட்டிங்கில் அலுச்சாட்டியம் செய்து இருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.
இதையும் படிங்க: ரெட்ரோ படம் குறித்து சூர்யா சொன்ன அந்த வார்த்தை..! நெகிழ்ச்சி பொங்க பேசிய கார்த்திக் சுப்புராஜ்..!

இந்த படத்திலும் இதே போல் செய்து இருப்பார் என பார்த்தால், சூர்யாவுக்கு முதலில் பேட்ட ரஜினிபோன்ற மீசை கெட்டப் கொடுத்து, அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை போன்ற கட்ஸ் உள்ள ட்ரெய்லரை கொடுத்துள்ளார். ஆனால்,இந்த ட்ரெய்லரில் விறுவிறுப்பு நிறைந்த அழகான காதல் மற்றும் கேங்ஸ்டர் கதையாக இந்த படம் அமையும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இப்படி இருக்க, இந்த படத்தில் பூஜா ஹெக்டேவும் சிறந்த நடிகைக்கான கதா பாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இப்படத்தை குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் கூறுகையில், 'ரெட்ரோ' என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். இந்தப் படத்தின் கதையும் 1990களில் நடக்கின்ற ஒரு 'காதல் கதை' என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை வைத்துள்ளோம். இது நீங்கள் நினைப்பதை போல் கேங்ஸ்டர் படம் அல்ல. அழகான காதல் படம். ஆதலால் இப்படத்தில் ஆக்ஷனும் உண்டு, மகிழ்ச்சியான தருணங்களும் உண்டு. மேலும், ரெட்ரோ படத்தில் சூர்யா, "பாரிவேல் கண்ணன்" என்ற கேரக்டரில் நடிக்கிறார். கதை பல இடங்களில் நடப்பதால் பல தோற்றங்களில் அவர் வருவார்.

படத்தில் கோபம், அடிதடி என்று வாழ்ந்து, தனக்கான இலக்கு என்ன என்று தெரியாமல் ஓடும் இளைஞன் வாழ்க்கையில் ஒரு பெண் வரும்போது, அந்தப் பெண்ணின் அன்பாலே அவன் தன்னை முற்றிலும் மாற்றிக் கொள்வதும், அந்தப் பெண்ணுக்காக வரும் பெரிய பிரச்சனையை தீர்த்து வைப்பதுமான மிரளவைக்கும் கதை. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் பூஜாவின் கேரக்டர் பெயர் ருக்மணி.
படத்தின் பெரும்பாலான கதை அந்தமானில் நடக்கிறது. தினமும் பல மைல் தூரம் படகில் சென்று ஆளே இல்லா தனி தீவில் தான் இந்த காட்சிகளை படம் ஆக்கினோம். ஒரு சில படப்பிடிப்பு வாரணாசியிலும் நடந்தது. மேலும், இந்த படம் நிச்சயமாக நான் இதுவரை எடுத்த கதைகளை போல் அல்லாமலும், சூர்யாவின் நடிப்பில் மக்கள் பார்க்காத முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவும் இருக்கும் என்றார்.

இந்த சூழலில், ரெட்ரோ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது பேசிய நடிகர் சூர்யா, "நான் சினிமாவிற்கு வந்து இதுவரை 25 வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது வரை நீங்கள் என்மீது காட்டும் அன்பிற்கு ஈடுஇணையே இல்லை. உங்கள் அன்பினால் தான் நான் நன்றாக உள்ளேன். வாழ்க்கை எப்போதுமே அழகானது தான் அதை நம்புங்கள். வாழ்க்கையை நம்பினால் நிறைய அழகான விஷயங்கள் நம் வாழ்விலும் நடக்கும். அதுமட்டுமல்லாமல் வாய்ப்பு வரும் பொழுது அதனை தவறவிட்டு விடாதீர்கள்.

எல்லோருக்கும் உடனே வாய்ப்பு கிடைக்காது திடீரென ஒரு நேரத்தில் அந்த வாய்ப்பு நம்மை தேடி வரும். அதனை அப்படியே பயன்படுத்தி கொள்ளவேண்டும். அப்படி வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் தான் நாம் ஜெயிக்க முடியும். ஜெயித்தால் தான் வாழ்க்கையை அழகாக வாழமுடியும். அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சினிமாவிலும் ஜெயித்த நான் இன்று அகரம் பவுண்டேஷனை உருவாக்க முடிந்தது.
இதுவும் மக்களாகிய உங்களால் தான் சத்தியம். இன்று அந்த அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக 10 ஆயிரம் தம்பி தங்கைளை பட்டதாரி ஆக்கி இருக்கிறோம். இன்னும் பலபேரை அப்படி ஆக்குவோம். இந்த சூழலில் இந்த படத்தில் எங்களை அற்புதமாக வழி நடத்திய இயக்குனரருக்கு நன்றி" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரெட்ரோ ஆக்ஷன் படம் அல்ல... யாரும் பார்க்காத காதல் படம்..! உண்மையை உடைத்த கார்த்திக் சுப்புராஜ்..!