ஆரம்ப கால கட்டத்தில் இருந்து தியேட்டர்களில் படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது, எவ்வளவு வசூலை பெறுகிறது என்பதை வைத்து படத்தின் தரத்தை ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் கணித்து வந்த நாட்களெல்லாம் மாறி போய், தற்பொழுது தியேட்டரில் வெளியாகி, எப்பொழுது ஓடிடியில் ரிலீசாகும், அப்படி ரிலீசான படத்தை மக்கள் எத்தனை முறை பார்க்கிறார்கள் என்பதை கணக்கிட்டு படத்தின் வெற்றியை நிர்ணயம் செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில், ஏற்கனவே, சீதாரா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், மீனாட்சி சௌத்திரி உடன் நடித்து வெளியான "லக்கி பாஸ்கர் திரைப்படம் செம ஹிட் கொடுத்தது. சுமார் 1990களில் வங்கி கணக்குகளை பயன்படுத்தி வங்கி ஊழியர் எப்படி பணம் சம்பாதிக்கிறார் என்பதை குறித்தும், வறுமையில் இருக்கும் தனது குடும்பத்தை மீட்க என்ன செய்தாலும் தவறு இல்லை என்பதை காண்பிக்கும் வகையிலும் அமைந்த இத்திரைப்படம், கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியாகி, வசூலில் ரூ.100 கோடியை கடந்து ஃபாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. இதனை அடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி "லக்கி பாஸ்கர்" படம் நெட்பிளீக்சில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு 13 வாரங்களை கடந்து, "டாப் 10" இல் இருந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெயரை பெற்றது. இதனை கொண்டாடும் வகையில் இப்படத்தை தயாரித்த சீராதா என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தலத்தின் மூலம் போஸ்ட் போட்டு தங்களது நன்றிகளை மக்களுக்கு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ஹீரோயின்கள்... சம்பளத்தை உயர்த்தியதால் வேதனையில் தயாரிப்பாளர்கள்..!

இப்படி லக்கி பாஸ்கரை தொடர்ந்து, சினிமாகாரன் நிறுவன தயாரிப்பில், ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே.மணிகண்டன், சான்வே மேகானா, குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படமான "குடும்பஸ்தன்" திரைப்படம் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகளவில் தற்பொழுது வரை ரூ.35 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

குடும்பத்தில் நடக்கும் எதார்த்த நிகழ்வுகளை கன கச்சிதமாக எடுத்து காண்பித்து இருக்கிறார் இயக்குனர். மணிகண்டனின் நடிப்பு இப்படத்தில் பயங்கரமாக இருந்தது .அதுமட்டுமல்லாமல் தனது அக்கா கணவரை வசைபாடுவதும், தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணை திருமணம் செய்வதால் உறவுகளும், குடும்பத்தில் இருப்பவர்களும் என்ன பேசுவார்கள் என்பதையும், வீட்டில் பையன் சம்பாரிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதையும் சிறப்பாக காண்பித்து இருப்பார் இயக்குநர்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் ஓடிடி தளமான "ஜீ 5"யில் வெளியானது. இதுவரை குடும்பஸ்தன் படத்தை 50 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஓடிடி நிறுவனம் சார்பில் சமூக வலைதள பக்கத்தில் போஸ்ட் போட்டு அதிகாரபூர்வ அறிவிப்பை கொடுத்துள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் அந்த போஸ்ட்டை ஷேர் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமண விழாவில் குத்தாட்டம் போட்ட சாய்பல்லவி..! அப்படி யாருடைய கல்யாணமா இருக்கும்..?