சமீபத்தில் பம்பா கணபதி கோயிலில் பாதபடியாக மலையேறி சபரிமலை சென்ற நடிகர் மோகன்லால், ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தார். எதற்காக திடீர் தரிசனம் என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தற்பொழுது அதிக பட்ஜெட்டில் தயாரான 'எம்புரான்' திரைப்படம் வரும் 27-ம் தேதி ரிலீசாவதை முன்னிட்டு மோகன்லால் சபரிமலையில் சுவாமி தரிசனம் நடத்தியதாக அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஆனால் மறைமுகமாக மம்முட்டிக்கு சிறப்பு அபிஷேகத்திற்கான பூஜை நடைபெற்றதற்கான டிக்கெட்டுகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், மலையாள திரைப்பட நடிகரான பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' திரைப்படத்தின் 2-ம் பாகமாக `எல் 2: எம்பூரான்' படம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இப்படத்தின் முதல் பாகத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. முதல் பாகத்தில் படத்தில் டோவினோ தாமஸ் 'ஜதின் ராமதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: புஷ்பா பட ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பவர் அல்லு அர்ஜுன் இல்லை..! இயக்குனர் பளிச் பேச்சு..!

`எல் 2: எம்பூரான்' படத்தின் இரண்டாம் பாகத்தை ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படி இருக்க, மலையாளம், தமிழ், தெலுங்கு இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் வருகிற 27-ம் தேதி ஐமேக்ஸ்-ல் வெளியாகிறது. இந்தநிலையில் ஐமேக்ஸ்-ல் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெயரை இப்படம் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து, இப்படத்தின் டிரெயிலரைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் 'எம்பூரான்' படக்குழுவைப் பாராட்டி பதிவிட்டு இருந்தார். அதில் "எனது அருமை மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எம்பூரான்' படத்தின் டிரெயிலரைப் பார்த்தேன். மிகவும் அற்புதமான படைப்பு. படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனைப் பிராத்திக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்து அனைத்து ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் முன்பதிவு ஆன்லைன் இணையதளங்கள் மூலம் நேற்று காலையில் ஆரம்பமானது. ஆரம்பமான ஒரு மணி நேரத்திலேயே 96 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது. இதனை பார்த்து படக்குழுவினர் ஆச்சர்யப்படுவதற்குள் 24 மணி நேரத்தில் 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது.

இது புதிய இந்திய சாதனை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதோடு முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.10 கோடி குவித்த எம்புரான் உலகளவில் ரூ.12 கோடியை தாண்டி வசூல் குவித்து வருகிறது.
இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்...! கண்ணீர் விட்டு கதறிய வரலட்சுமி, கேமி..! கட்டியணைத்து அழுத ஸ்னேகா..!