மலையாள திரைப்பட நடிகரான பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' திரைப்படத்தின் 2-ம் பாகமாக `எல் 2: எம்பூரான்' படம் பார்க்கப்படுகிறது. லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான `எல் 2: எம்பூரான்' திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படி இருக்க, மலையாளம், தமிழ், தெலுங்கு இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் வருகிற 27-ம் தேதி ஐமேக்ஸ்-ல் வெளியாகிறது.

இந்தநிலையில் ஐமேக்ஸ்-ல் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெயரை இப்படம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, இப்படத்தின் டிரெயிலரைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் 'எம்பூரான்' படக்குழுவைப் பாராட்டி பதிவிட்டு இருந்தார். அதில் "எனது அருமை மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எம்பூரான்' படத்தின் டிரெயிலரைப் பார்த்தேன். மிகவும் அற்புதமான படைப்பு. படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனைப் பிராத்திக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்து அனைத்து ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: நடிகர் மம்முட்டி பெயரில் மறைமுக அர்ச்சனை..! மோகன்லாலின் பூஜையால் உடைந்த ரகசியம்..! எங்கே இருக்கிறார் மம்முட்டி..?

இப்படி இருக்க, இப்படத்தின் முன்பதிவு ஆன்லைன் இணையதளங்கள் மூலம் மூன்று நாட்களுக்கு முன்பு ஆரம்பமானது. ஆரம்பமான ஒரு மணி நேரத்திலேயே 96 ஆயிரம் டிக்கெட்டுளும், அடுத்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு உலக அளவில் ரூ.12கோடிக்கு விற்பனையானது. ஆதலால் இப்படத்தின் வெற்றியை இப்பொழுதே முடிவு செய்த ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் அதனை கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையில், எல் 2 எம்பூரான் படத்திற்கான சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி சமீபத்தில் தனியார் சேனலில் நடிப்பெற்றது. அதில் பங்கு பெற்ற பிருத்விராஜ், பதினோரு வருடங்களுக்கு முன்பாக நான் கண்ட கனவை உண்மையாக்கிய படம் தான் 'லூசிஃபர்' மற்றும் 'எல் 2 எம்பூரான்' திரைப்படங்கள் எனவும், எம்பூரான் கதை அரசியல் ரீதியாக எடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை இது என்னுடைய எழுத்தாளரான முரளி கோபி-யின் எண்ணத்தில் உருவான அருமையான கதை, அவரது ஆசைக்கு நான் தடையாக இருக்கவில்லை அவ்வளவு தான்.
மேலும், படத்தினுடைய பட்ஜெட்டை நாங்கள் வெளியிடவில்லை ஆனால் படத்தை பார்க்கும்பொழுது அதன் பட்ஜெட் என்னவாக இருக்கும் என்பது உங்களால் கணக்கிட முடியும். அதுமட்டுமல்லாமல் பட்ஜெட் என்பது கேமராவிலோ, படம்பிடிக்கும் இடத்திலோ இல்லை அத்தனை நாள் உழைப்பில் உள்ளது.

இப்படம் கிட்டத்தட்ட 143 நாட்கள் எடுக்கப்பட்டது. அத்தனை நாள் படப்பிடிப்பில் பல இயற்கை தடைகள் எங்களுக்கு வந்தது. ஆனால் என்னுடைய படக்குழுவினர் ஒருநாள் கூட அதற்காக ஒய்வு எடுக்கவில்லை கடுமையாக உழைத்தனர். இப்படம் உருவாவதற்கு முன்பாக இரண்டு வருடங்களாக இப்படத்தில் வேலை செய்திருக்கிறோம் என்றார். இதனை அடுத்து படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இப்படத்தின் டிக்கெட்டுகள் தற்பொழுது உலகளவில் ரூ.65 கோடிக்கும் மேல் விற்பனையாகி உள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள் கண்டிப்பாக அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி சாதனை படைக்கும் என கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்முட்டி...? விளக்கம் கொடுத்துள்ள படக்குழுவினர்..!