பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. பார்க்க அழகாகவும் கொழு கொழு கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் சிங்கர், டான்ஸ் நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தன் கையில் வைத்து அசத்தி வருகிறார்.

இதனை அடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி போர் அடித்துப் போன பிரியங்கா.. அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். ஆனால் அவர் களம் இறங்கிய பின்பு போட்டியில் விறுவிறுப்பு ஒரு பக்கம் அதிகரிக்க மறுபக்கம் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியான மணிமேகலைக்கும் அவருக்கும் இடையே யார் மிகப்பெரிய தொகுப்பாளினி என்ற சண்டை ஆரம்பித்தது.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளிவரும் நடிகை வரலட்சுமியின் திரில்லர் திரைப்படம்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஒவ்வொரு முறையும் மணிமேகலை விட்டுக் கொடுத்து செல்ல ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த மணிமேகலை பிரியங்காவிற்கு எதிராக வீடியோ ஒன்றை பதிவிட்டு பிரியங்காவின் மொத்த இமேஜையும் காலி செய்தார். தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் பல பேருடைய வாழ்க்கையே பிரியங்கா அழித்து வருவதாகவும் அவர் கூற, அது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்த சூழலில், நடிகை பிரியங்கா ஏற்கனவே பிரவீன் என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இணையதளங்களில் இருந்து சற்று விலகி இருக்கும் பிரியங்கா ரகசியமாக திருமணம் செய்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து, தொகுப்பாளினி பிரியங்காவிற்கும் பிஸ்னஸ் மேன் என்று சொல்லக்கூடிய வசி என்பவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றது என்ற உண்மையை பிரியங்கா தனது இன்ஸ்ட்டா பதிவியில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த தொகுப்பாளினி பிரியங்காவிடம், திருமணத்திற்கு பின் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த பிரியங்கா, "திருமணத்திற்கு பின் அந்த ஃபீலிங் நன்றாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜாலியாக உள்ளது. அதன்பின், அமீர் பாவனி குறித்து பேசிய பிரியங்கா, திருமண தம்பதி எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி அழகாக பேசினார்.

அதில் "திருமண வாழ்க்கை சிறந்ததிலும் சிறந்ததாக இருக்க வேண்டும். அதைவிட முதலில் நண்பர்களாக இருக்க வேண்டும். திருமண பந்தத்தில் நட்பு என்று இருந்தால் அது ஒரு அழகான காதலாக மாறிவிடும்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி பட்ஜெட் படங்களில் நடிகை சமந்தா..! கம்பேக்கில் ஜாக்பாட் அடித்து சாதனை..!