ரேடியோ ஜாக்கியாகவும், நகைச்சுவை நடிகராகவும் இருந்த ஆர்.ஜே.பாலாஜி, மூக்குத்தி அம்மன் படம் ??மூலமாக இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2020-ம் ஆண்டு வெளிவந்த இந்த படம், பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆர்.ஜே.பாலாஜியையும் ஒரு இயக்குநராக நிலைநிறுத்தியது. இன்னும் சொல்லப்போனால் அந்த சமயத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நயன்தாராவுக்கு ஒரு ரிலீஃபாகவும் மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றி அமைந்தது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு கான்செப்ட் வெற்றி பெற்றுவிட்டால் ஒன்று அதன் இரண்டாம் பாகம் வெளிவரும் இல்லையெனில் அதே ஜானரில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகும். அந்த வகையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. கடந்த ஆண்டு மீண்டும் மூக்குத்தி அம்மன் படம் பற்றிய பேச்சு வந்தது.
இதையும் படிங்க: மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் சமந்தா...இப்படியா என வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!
அதேசமயம், 2020-ம் ஆண்டில் இருந்து பெரிய வெற்றிக்காக காத்திருந்தார் நயன்தாரா. ஏனெனில் அதே ஆண்டில் அவர் நடித்த தர்பார், அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் நடித்த நிழல், நெற்றிக்கண், புல்லட், அண்ணாத்த, ஓ2, காட்பாதர், கோல்டு, கனெக்ட், இறைவன், அன்னபூரணி என பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்தன. விஜய் சேதுபதியால் காத்துவாக்குல ரெண்டு காதல், ஷாருக்கானால் ஜவான் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன.

சரி படங்கள் தான் சரிவை சந்தித்து விட்டன, கல்யாண கேசட்டை விற்றாவது நெட்பிளிக்சில் காசு பார்க்கலாம் என்று நயன்தாரா போட்ட கணக்கும் புஸ்வாணம் ஆகிவிட்டது. அவரது கல்யாண ஆவணப்படத்தை இணையத்தில் சீந்துவாரில்லை. அதனை வெற்றி பெற வைக்க தனுசைக் கூட சண்டைக்கு இழுத்துப் பார்த்தார் நயன்தாரா. ஆனாலும் அது எடுபடவில்லை.
இந்த சூழ்நிலையில் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று மூக்குத்தி அம்மனை கையில் எடுத்து விட்டார் நயன்தாரா. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை எடுக்க உள்ளன. ஆனால் முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜிக்குப் பதிலாக சுந்தர்.சி இப்படத்தை எடுக்க உள்ளாராம்.

நடிகர் சூர்யாவின் படத்தை ஆர்.ஜே.பாலாஜி எடுத்து வரும் நிலையில், மூக்குத்தி அம்மனை இயக்குவது ஒன்றும் அவருக்கு கடினமாக இருக்காது. முதல்பாகத்தை எடுத்தவர் தானே.. ஆனால் அவருக்கு பதிலாக சுந்தர்.சி.ஒப்பந்தம் செய்யப்பட்டது ஏன் என்பது கேள்வியாக உள்ளது. மூக்குத்தி அம்மன் படத்தின் போது ஆர்.ஜே.பாலாஜியுடன் ஏதேனும் நயன்தாராவுக்கு லடாயா? என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
தொடர் தோல்விகளுக்குப் பிறகு மூக்குத்தி அம்மனாவது தனக்கு கைகொடுக்குமா என ஏங்கி வருகிறாராம் நயன்தாரா...
இதையும் படிங்க: சிகரெட் பிடிக்கும் ஜோதிகா...சூர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!!