சினிமா துறையில் மறக்கடிக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் நடிகை ஸ்ருத்திகா. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ எனும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் மறைந்த நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து ஆல்பம், தித்திக்குதே உள்ளிட்ட சில படங்களிலும் ஸ்ருத்திகா நடித்திருந்தார். ஆனால் அவையும் ஃபிளாப் ஆகிவிட்டது.

இதனால் சினிமா துறை எதிர்பார்த்தபடியான வெற்றியை கொடுக்கவில்லை என்பதால் நடிப்பதை நிறுத்திக் கொண்டு குடும்ப வாழ்க்கையை தேர்ந்தெடுத்த ஸ்ருதிகா அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்க,இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்த நிலையில், சினிமாவில் தனக்கு கிடைக்காத ரசிகர்களை சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் தனது ரசிகர்கர்களை பெற்றுக்கொள்ள நினைத்த ஸ்ருதிகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கலகலப்பான பேச்சாலும் சிரிப்பாலும் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.
இதையும் படிங்க: நடிகை ஸ்ருதிகாவின் தம்பி நிச்சயதார்த்த விழா.. புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சி...!

அடுத்ததாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சல்மான்கானின் ஹோஸ்டிங்கில் கடந்த ஆண்டு நடிப்பெற்ற பிக் பாஸ் ஹிந்தி ஷோவில் பங்கேற்றார் ஸ்ருதிகா அர்ஜுன். இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற முதல் தென்னிந்திய பிரபலம் என்ற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருந்த ஸ்ருதிகா வட இந்திய ரசிகர்களையும் இன்று தன் வசபடுத்தியுள்ளார்.

இந்த சூழலில் தனியார் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை ஸ்ருதிகா, உங்களுக்கு தெரியுமா..? நான் சமீபத்தில் காசிக்கு சென்றேன் அங்கு என்னை பார்த்த மக்கள் முதல் பூசாரிகள் வரை, அக்கா நீங்க பிக்பாஸில் வந்த ஸ்ருதிகா தானே என கூறி என்னுடன் அன்பாக பேச ஆரம்பித்தனர்.
இதில் கஷ்டமான விஷயம் என்னவெனில் எனது கணவர் ஒருநாள் தான் பிக்பாஸில் என்னை பார்க்க வந்தார், 96 நாட்கள் அங்கு கஷ்டப்பட்டது நான், ஒரே நாள் உள்ளே வந்து அவர் ஃபேமஸ் ஆகிட்டார். எனக்கு சினிமாவை விட பிஸ்னஸ் தான் முக்கியம். அதுமட்டுமல்லாமல் எனக்கு ரஜினி சாரை மிகவும் பிடிக்கும். அதனால் தான் சல்மான் கானையே வணக்கம் தலைவா என கூற வைத்தேன்.

பிக்பாஸ் உள்ளே இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. அங்கு சென்ற பின்தான் எனக்கே தெரிந்தது எனக்கு அவ்வளவு கோபம் வரும் என. அந்த அளவிற்கு என்னையே கோபப்படுத்திடாங்கையா.. இதுல சிரிப்பு என்னவென்றால், நான் என் கணவருக்கே இதுவரையில் சப்பாத்தி சுட்டு கொடுத்ததில்லை. ஆனால் அந்த வீட்டில் இருந்தவரைக்கும் அனைவருக்கும் நான் தான் சமைத்து கொடுத்தேன். இதனை பார்த்து என் கணவர் ஆச்சரியப்பட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் என்றால் எங்கள் வீட்டில் பத்து வருடங்களாக வேலை செய்து வரும் பாரதி அம்மா தான். அவர் என்னை எப்பொழுதும் 'பாப்பு' என்று தான் அழைப்பார். என்னை நன்றாக கவனித்து கொள்வார். அதனாலயே அவரை நான் பார்த்து கொள்வேன். அதன் காரணமாக எனது கணவர் அவர் மீது பொறாமை படுவார்.
நான் பிக்பாஸில் இருந்த 96 நாட்கள் உபயோகித்த உடைகள் அனைத்தும் புதிது. தினமும் என் கணவர் ஒரு ட்ரெஸை வாங்கி கொடுத்து விடுவார். பிக்பாஸ் விட்டு வெளியே வந்ததும் மீண்டும் அவரிடம் ட்ரெஸ் வாங்கி தரும்படி கேட்டேன் அதற்கு அவர் 'செம அடி வாங்குவ' என என்னை திட்டிவிட்டார் அந்த அளவிற்கு ட்ரெஸ் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது கணவர் இல்லை என்றால் இன்று நான் இல்லை என அழகாக பேசி இருக்கிறார் நடிகை ஸ்ருதிகா.

இதனை பார்த்த பல இளசுகள் நமக்கு காதலியாக அல்லது மனைவியாக ஸ்ருதிகாவை போல ஜாலியான ஒருவர் அமைய வேண்டும் என கடவுளிடம் வேண்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: அஜீத் படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு... கடுப்பான தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ்!!