சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் எடுத்து இருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரை இவர் எடுத்த எந்த படமும் தோல்வியில் முடிந்ததில்லை. அப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ், தற்பொழுது ரஜினியின் "கூலி" படத்தின் படப்பிடிப்பை முற்றிலுமாக முடித்து, அடுத்த கட்ட பணியில் அடியெடுத்து வைத்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் தற்பொழுது 'ஜெயிலர் 2' வில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த சூழலில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்றாலே ரசிகர்களுக்கு குதூகலம் தான். அந்த அளவிற்கு அவர் படத்தில் விஷயம் இருக்கும். குறிப்பாக இவர் நடிகர் விஜய் வைத்து "மாஸ்டர்" திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதில் நடிகர் விஜயின் கில்லி திரைப்படத்தின் பாடலை வைத்து கபடி போட்டியை வேறு விதமாக காண்பித்து இருப்பார், அதுமட்டுமல்லாமல், நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியை வைத்து படத்தின் காட்சிகளை அசத்தியிருப்பார்.
இதையும் படிங்க: நாளை வெளியாகிறது கூலி படத்தின் புது அப்டேட்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இதனை தொடர்ந்து, உலகநாயகன் கமல்ஹாசன், தனக்கு ஏற்ற ஒரு நல்ல படத்தை யார் கொண்டு வருவார்கள்? என்று காத்துக் கொண்டிருந்த பொழுது, லோகேஷ் கனகராஜ் தனது இயக்கத்தில் "விக்ரம்" படத்தை தயாரித்து, நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் கமலஹாசனுக்கு தலை சிறந்த வெற்றிப் படத்தை கொடுத்தார்.

மேலும், இரவு காட்சிகளை மட்டுமே அடிப்படையாக வைத்து உருவாக்கிய "கைதி" திரைப்படத்தை மிகவும் மிரட்டலாக காண்பித்து இருப்பார். சமீபத்தில் நடிகர் விஜயை வைத்து இவர் இயக்கிய "லியோ" திரைப்படம் பல விமர்சனங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி படமாக ஓடியது. இவருடைய படங்கள் அனைத்தும் சீரிஸ்கள் போல் தனி பேட்டன் ஆகவே இயக்கும்.

இப்படி இருக்க, நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுபின் ஷாகிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். கடந்த 1995ம் ஆண்டு மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பெயரும் 'கூலி' தான். தற்பொழுது ரஜினி நடித்திருக்கும் படத்தின் பெயரும் 'கூலி' என்பதால் ரசிகர்களிடம் இப்படம் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

மேலும் இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது 'கூலி' திரைப்படம்.

சமீபத்தில், 'கூலி' படப்பிடிப்பானது ஹைதராபாத் மற்றும் பாங்காங் ஆகிய பகுதிகளில் முற்றிலுமாக நிறைவடைந்து உள்ளது. இதற்கிடையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் அன்று கூலி திரைப்படத்தின் உருவாக்க புகைப்படங்கள் வெளியானது. பின் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஒரே நிற ஆடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. அதுமட்டுமல்லாமல் படம் வெளியாவதற்கு முன்பே 'அமேசான் பிரைம்' ஓடிடி தளத்தில் சுமார் ரூ.110 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில், 'கூலி' படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் "வார் 2" திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி, தற்பொழுது படம் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது சன் பிச்சர்ஸ் நிறுவனம். அதன் படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் எனவும்,

கண்டிப்பாக சுதந்திர தினத்தன்று மூன்று நாள் விடுமுறையில் மக்கள் படத்தை கண்டுகளிக்கலாம் எனவும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: ரசிகருக்காக ரஜினி செய்த நெகிழ்ச்சி செயல்..! வெளிநாட்டிலும் குறையாத மாஸ்..!