சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலந்து கொண்டு தனது அபார காமெடி திறமையால் இன்று அனைவரது உள்ளத்தையும் கவர்ந்த உண்மையாக நாயகன் என்றால் அதுதான் நம் ரோபோ ஷங்கர். பார்க்க குண்டாக அழகான தோற்றத்துடன் வலம் வந்த இவர் சில நாட்களாக திரையுலகில் காணமால் போக, அனைவரும் அரசல்புரசலாக பேச ஆரம்பித்தனர்.
இப்படி அனைவரது பேச்சுக்களும் அதிகரிக்க, ஒரு நாள் சின்னத்திரை காமெடி நிகழ்ச்சியில் ஒல்லியாக மாறி வந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் ரோபோ சங்கர். அவரது தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், என்ன ஆனது..? என புலம்ப, யாரும் கவலை பட வேண்டாம் என்று சொல்லி தயவு செய்து இனி யாரும் வாழக்கையில் குடிக்காதீர்கள் அது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என கூறியிருந்தார்.

இப்படி பட்ட ரோபோ சங்கர், பல முறை தனது நடிப்பால் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார். அதன்படி 'மாரி' திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு எடுபிடியாக 'சனிக்கிழமை' என்ற பெயருடன் நடித்து இருப்பார். குறிப்பாக அதில் "சார்ட்டடே ஆனால் கண்டிப்பாக சரக்கடிப்பேன்" என கூறி பல மீம்ஸ்களுக்கு மன்னனாக வலம் வந்தார்.இப்படி பட்டவர், இதுவரை தர்ம சக்கரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மய்யம், யட்சன், மாரி, புலி, டூரிங் டாக்கீஸ், ஸ்ட்ராபெரி, வீர சிவாஜி, விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும், கடவுள் இருக்கான் குமாரு, க க க போ,
இதையும் படிங்க: என்றும் அன்புடன் நட்சத்திரன்..! ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்..!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜித்தன் 2, சரவணன் இருக்க பயமேன், ப.பாண்டி, வேலைக்காரன், எஸ் 3, இரும்பு திரை, கலகலப்பு 2, மன்னர் வகையறா, மாரி 2, ஜருகண்டி, ஹீரோ, Mr.லோக்கல், நேத்ரா, வந்தா ராஜாவாதான் வருவேன், விஸ்வாசம், கன்னி ராசி, காடன், குட்டி ஸ்டோரி, களத்தில் சந்திப்போம், பிளான் பண்ணி பண்ணனும், சக்ரா, ஜெயில், சிண்ட்ரெல்லா, கோப்ரா, தி லெஜெண்ட், இரவின் நிழல், யுத்த சத்தம், ஆர் யு ஓகே பேபி, தமிழரசன், சிங்கப்பூர் சலூன், கபாலி தோட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இப்படி பல படங்களில் நடித்த ரோபோ ஷங்கர் தனது குடும்பத்தின் மீது அதிக அக்கறை உள்ளவர். அதன்படி அவரது மகளான இந்திரஜா சங்கர் நடிகர் விஜயுடன் பிகில் படத்தில் நடித்து பிரபலமானார். அப்படத்தில் விவேக் அவரை "பாண்டியம்மா வெறியான படுத்திடும் ஹரியானா" என கூறி அவரை மாஸாக்கி இருப்பார்.

இப்படி பிரபலமான இவருக்கு திருமணம் ஆன பொழுது நெட்டிசன்கள் பல தவறான கருத்துக்களையும் மனதை நோகடிக்கும் வகையிலும் பேசி வந்த நிலையில், அந்த நெகட்டிவிட்டி கமெண்ட்ஸ்கள் அனைத்தையும் பாசிட்டிவ் ஆக்கினார் இந்திரஜா சங்கர். இதனை தொடர்ந்து, சமீபத்தில் அவர் ஆண் குழந்தையும் பெற்றெடுத்திருந்தார். இதனைப் பார்த்த அனேக ரசிகர்கள் அவருக்கும் அவரது குழந்தைக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறி வந்தனர்.

இந்த சூழலில், இதுவரை யாருக்கும் காட்டத தனது மகனின் முகத்தை தற்பொழுது அசத்தலாக காண்பித்து இருக்கிறார் இந்திரஜா சங்கர். அதன்படி உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் இந்திரஜா சங்கர் மற்றும் கார்த்திக் தம்பதிக்கு பிறந்த ஆண் வாரிசுக்கு "நட்சத்திரன் கார்த்திக்" என அருமையாக பெயர் சூட்டி இருந்தார். இந்த நிலையில் தற்பொழுது இந்திரஜா மகன் மக்களின் பார்வையில் அகப்பட்டிருக்கிறார்.

சின்ன சின்ன முருகையா என்று பாடல் பாடிய வண்ணம் முருகன் தனது மயில் வாகனத்தில் பவனி வருவது போன்ற போட்டோவில் அழகாக போஸ் கொடுத்து இருக்கிறார் சின்ன குட்டி முருகனான நட்சத்திரன் கார்த்திக்.
இதையும் படிங்க: சிவனைப் பார்த்து மிரண்ட இந்திரஜா சங்கர்... பக்தி பரவசத்தில் பரதம் ஆடிய வீடியோ வைரல்..!