தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு, இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். இந்த சூழலில் நடிகை சமந்தாவுக்கு நாக சைதன்யா தரப்பில் இருந்து ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுத்த நிலையில் அதனை சமந்தா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளியான நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்பின் முதலில் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி பட்ஜெட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த இவர்களது திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது.
இதையும் படிங்க: 'முத்துகுளிக்க வாரீங்களா'...! தனது கணவரை மயக்க வித்தியாசமான ஆடையில் ரகுல் ப்ரீத் சிங்...!

திருமணத்திற்கு பிறகு ஹனிமூனில் பிசியாக இருந்த சோபிதா சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில், ஒருநாள் நான் ரசிகர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கூறிக்கொண்டு இருந்தேன். அப்போது ஒருவர் 'உங்களை நாக சைதன்யா இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் பொழுது நீங்கள் மட்டும் ஏன் அவரை ஃபாலோ செய்யவில்லை?' என கேட்டிருந்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், எனது செல்போனை எடுத்து அவரது இன்ஸ்டா கணக்கிற்கு சென்று பார்த்தேன், அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனேன். ஏனெனில் எனக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அவர் என்னை ஏற்க்கனவே ஃபாலோ செய்து எனது பதிவுகளுக்கு லைக் போட்டு இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அவரது இன்ஸ்டாவில் வெறும் 70 பேரை தான் ஃபாலோ செய்து இருந்தார். அதில் என் கணக்கும் ஒன்று என்பது எனக்கு ஸ்பெஷலாக இருந்தது. அதற்கு பின்பு தான் அவரை எனக்கு பிடிக்க ஆரம்பித்து, அது காதலாக மாறி தற்பொழுது திருமண பந்தத்தில் முடிந்துள்ளது என கூறினார். இதனால் சமந்தாவின் பாதி ரசிகர்கள் கடுப்பில் இருக்க அடுத்த நேர்காணலில் சமந்தாவின் ரசிகர்கள் அனைவரையும் கடுப்பாக்கினார் சோபிதா.

நாகசைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் சேர்ந்து ஒரு இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தனர். அதில், இருவரும் பார்க்க சிறந்த ஜோடியாக காணப்படுகிறீர்களே உங்களுக்குள் காதலை முதலில் சொன்னது யார்? என நிரூபர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சோபிதா, வெட்கத்துடன் 'நாக சைதன்யா தான்' என தெரிவித்திருக்கிறார்.
அதற்கு நாக சைதன்யாவும் "With Pleasure" என கூறி அதை உறுதி செய்தார். இதனை பார்த்து ஆவேசம் அடைந்த சமந்தா ரசிகர்கள், அப்ப சமந்தா உடன் வாழ்ந்துகொண்டிருந்த பொழுதே சைதன்யா, சோபிதாவை காதல் பண்ணி சமந்தாவிற்கு துரோகம் செய்து இருக்கிறார் என கடுமையாக தாக்கி பேசினர்.

இந்த நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தான் "வேட்டுவம்". இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், இப்படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நாக சைதன்யாவின் மனைவி சோபிதா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பின் சோபிதா நடிக்கவுள்ள முதல் தமிழ் திரைப்படம் என்பதால் தெலுங்கு ரசிகர்கள் முதல் தமிழ் ரசிகர்கள் வரை படத்தை காண ஆவளாக உள்ளனர்.
இதையும் படிங்க: "என்ன மக்களே இப்படி பண்ணுறீங்க.." துஷாரா விஜயன் போட்ட ஒற்றை பதிவு..! ரசிகர்கள் ஆரவாரம்..!