இன்று தமிழ் திரையுல நடிகைகளில் பல சூப்பர் ஸ்டார் இருந்தாலும் இன்று வரை அனைவரது மனதிலும் குடிபுகுந்த சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகை ஸ்ரேயா. தனது அழகான சிரிப்பு, அனைவரையும் கவரும் கண்கள், ஜெனிலியாவை போல வெகுளித்தனமான பேச்சு ஆகியவை மூலமாக இன்றளவும் தனது ரசிகர்கர்களை தக்க வைத்து வருகிறார்.

ஸ்ரேயா சரன், டெல்லியில் தனது இளங்கலை பட்ட படிப்பின் போது, ஒரு வீடியோ ஷூட்டில் கலந்துகொண்டு நடனமாடினார். இவர் ஆடிய நடனத்தின் வீடியோ வைரலாக நிறைய படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இதில் 2001ம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான "இஷ்டம்" திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையில் அறிமுகமானார்.
இதையும் படிங்க: ரசிகர்களை கவர வைத்த கவர்ச்சி புகைப்படம்... பூர்ணிமாவின் போட்டோவால் மதி மயங்கிய ரசிகர்கள்...!

இதனை தொடர்ந்து, ஹிந்தியில் திரைப்படத்திலும் நடித்து தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகையாக அறிமுகமானார். இந்த நிலையில், தமிழ் திரையுலகில் 2003ம் ஆண்டு காலடி எடுத்து வைத்த ஸ்ரேயா, தமிழில் "எனக்கு 20 உனக்கு 18" என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகி ரசிகர்களை பெற்று கொண்டார்.

அது மட்டுமல்லாது , 2005-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த மழை திரைப்படத்தில் நாயகியாக நடித்து இன்று வரை மழை பாடல் என்றால் ஸ்ரேயா தான் நினைவுக்கு வருவார் என்பதற்கு ஏற்ப பிரபலமானார். இதே போல் "திருவிளையாடல் ஆரம்பம்" படத்தில் தனுஷுக்கு காதலியாகவும் பிரகாஷ்ராஜ்க்கு தங்கையாகவும் ஸ்ரேயா நடித்த இப்படம் பெரிய வெற்றியை தேடி அளந்தது.

இதனை அடுத்து ,2007ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் உருவான "சிவாஜி" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கதாநாயகியாக நடித்து தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவனானார்.இப்படி இருக்க, திடீரென திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, நல்ல மனைவியாகவும் குழந்தைகளுக்கு தாயாகவும் மாறி திரைப்படத்தில் இருந்து ஒதுங்கி குடும்பத்தை பிஸியாக பார்த்து வருகிறார்.

ஆனாலும், போட்டோ ஷூட்களில் இருந்து விலகாத ஸ்ரேயா, தினமும் தனது இன்ஸ்ட்டா பகுதியில் தனது புகைப்படத்தை பதிவு செய்து அவ்வப்போது நான் இருக்கிறேன் என தனது நியாபகத்தை ரசிகர்கள் மனதில் பதிய வைத்து வருகிறார். இந்த நிலையில் அவரது அடுத்த கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: திரைக்கு வந்த 10 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல்... சாதனை படைத்த 'டிராகன்'..!