கிட்ஸ்கள் அனைவரையும் கவர்ந்தவர் என்றும் கோட் படத்தில் 'நான் போகிறேன் இனி நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என நடிகர் விஜய்யிடம் வாழ்த்து பெற்று அடுத்தடுத்த படங்களில் தனது முழு உழைப்பையும் செலுத்தி முன்னேறி வரும் சிவகார்த்திகேயனின் ஆரம்ப வாழ்க்கை கஷ்டம் தான்.
ரூமில் படுக்க கூட இடமில்லாமல், இரவு பகலாக தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஜோடி டான்ஸ், அது இது எது, விருது வழங்கும் விழா என அனைத்திலும் தொகுப்பாளராக இருந்து தன்னுடைய காமெடி திறமையாலும், நடிகர்களின் குரல்களை தன் வசப்படுத்தி, அதை தனக்குண்டான பாணியில் பேசி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் நீண்ட நாட்களாக தொகுப்பாளராக இருந்த இவருக்கு அடுத்த கட்ட பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது அட்லீ இயக்கத்தில் உருவான 'முகப்புத்தகம்' என்ற குறும்படம், இதில் நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன் சில விளம்பரங்களிலும் நடித்து, பின் 2012 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'மெரினா' படத்தில் நடித்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக தனது காலடியை பதித்தார். அதன் பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், ரஜினி முருகன் என படிப்படியாக வெற்றி படங்களை கொடுத்து இன்று பராசக்தி, மதராஸி படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: நடிகர் சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.கே..! கட்டி அனைத்து அன்பை பகிர்ந்த சூரி..!

இதுவரை தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன், மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, ரஜினி முருகன், வேலைக்காரன், கனா, சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை, Mr.லோக்கல், ஹீரோ, டாக்டர், ப்ரின்ஸ், டான், மாவீரன், அமரன், அயலான், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில், தற்பொழுது ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் "மதராஸி".
உண்மையில் இந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் 'எஸ்கே 23" தான். இதற்கு காரணம் இப்படம் சிவகார்த்திகேயனின் 23வது படம் என்பதால் அவரது பிறந்தநாள் அன்று தான் இப்படத்தின் பெயரை வெளியிடுவோம் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார் இப்படத்தின் இயக்குனர். அதன் பின், எஸ்கே பிறந்தநாள் அன்று படத்தின் பெயர் "மதராஸி" என கூறிய ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இப்படத்தின் பெயர் "தில் மதராஸி" என குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து, மதராஸி என பெயர் வைக்க என்ன காரணம் என்பதை பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ், வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை என்றும் வட இந்திய மக்கள் தென் இந்திய மக்களை இன்றளவும் அழைக்கும் வார்த்தை 'மதராஸி' தான், ஆதலால் "மதராஸி" என்ற பெயர் வைக்கப்பட்டது என்றார்.

இந்நிலையில் 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர் படக்குழுவினர். அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஆசிரியர்கள் தினத்தன்று படம் ரிலீஸ் ஆகிறது. அந்த தேதியில் மிலாடி நபி விடுமுறை வருகிறது, அதுமட்டுமல்லாமல் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அடுத்த இரண்டு நாட்களும் வார இறுதி நாட்கள், ஆக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே ரசிகர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் படத்தை காணலாம் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், இப்படத்திற்கு தமிழில் 'மதராஸி' என்று பெயர் வைத்த முருகதாஸ், இந்தியில் "தில் மதராஸி" என குறிப்பிட்டு உள்ளது ஏன்? தில் என்றால் மனசு அப்பொழுது "வட இந்தியர்களின் மனதை திருடிய மதராஸி" என்று சொல்ல வருகிறார் போல என மகிழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரம்மாண்டமாக தயாராகும் அட்லீ படம்..! லண்டன் நிறுவனத்தை வாய்பிளக்க வைத்த ஸ்கிரிப்ட்..!