ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிடித்த பாடல் என்றால் உடனடியாக மக்களின் மனதில் இருந்து வரும் பாடல் "முஸ்தப்பா முஸ்தப்பா டோண்டோரி முஸ்தப்பா" என்ற பாடலும், "தோழா.. முன்னாள் வாடா... உன்னால் முடியும்" என்று மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் பாடல்தான். இப்படி நட்புக்கும், காதலுக்கும், வாழ்க்கைக்கும் என மிரட்டலான மற்றும் மெலடியான பாடல்களை கொடுத்த பெருமைகளுக்கு சொந்தக்காரர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். பார்க்க அமைதியாக இருப்பதை போல் தோற்றம் அளிக்கும் இவர், இசை கருவியில் கைகளை வைத்தால் அமைதிகளை களைத்து இசை அரக்கனாக மாறி, கர்ஜிக்க தொடங்கி விடுவார்.

இத்தனை பெருமைகளும் சொந்தக்காரரான ஏ.ஆர்.ரகுமானின் ஆரம்ப வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருந்தது. குடும்பத்தில் வருமானம் இல்லாத காலக்கட்டத்தில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுத்து வருமானம் ஈட்டி வந்தார். அப்பொழுது கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் முதலிய இசைக்கருவிகளை வாசிக்க கற்று கொண்டார்.
அதன்பின், தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். தனது 11வது வயதில் 'இளையராஜா' இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்து, பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி தன்னுடைய திறமையை வளர்த்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், முறையாக டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இதையும் படிங்க: மங்காத்தா 2 குறித்து அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..! பயங்கர குஷியில் அஜித் ரசிகர்கள்..!

இதனை அடுத்து, 1992ம் ஆண்டு தனது வீட்டிலேயே "மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர்" அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், சினிமாவில் இசைப்பயணத்தை தொடங்க காரணமாக இருந்தவர் இயக்குநர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மக்களுக்கு பிடித்து போக அதன்பின், இந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து "இசைப்புயல்" என்ற பட்டத்தை மக்களிடம் இருந்து பெற்றார்.

அதன்பின், இவரது உழைப்புக்கு பலனாக, ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றார். மேலும் "ஸ்லம் டாக் மில்லியனியர்" என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதும், 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும், பாஃப்டா விருதும் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையையும் தட்டி சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதனை தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் "பத்ம பூசண் விருது" இவருக்கு அளிக்கப்பட்டது.

இப்படி இருக்கும் ஏ.ஆர் ரகுமான் எப்பொழுதும் தனது தாய்மொழியை எங்கு சென்றாலும் விட்டு கொடுக்காமல் எந்த மேடையில் ஏறினாலும் "எல்லா புகழும் இறைவனுக்கே" என கூறியும், யாராவது ஹிந்தியில் கேள்விகளை கேட்டாலும் அதற்கு தமிழில் பதிலளித்து தக் லைஃப் கொடுப்பார் அந்த அளவிற்கு தனது தமிழ் பற்றுதலை வெளிகாட்டுவார். அந்த வகையில், இந்த தமிழ் புத்தாண்டு திருநாளில் சிறப்பான தகவலை தமது இன்ஸ்ட்டா தளத்தில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரிய பட வைத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

அதில், “தமிழ்” உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன. இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது. ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் பெருமைச்சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும். இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம். என தெரிவித்துள்ளார். இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்!

தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ரகுமான் ஈடுபட்டு வருவம் தகவல்கள் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: பல கோடி பணத்தை மக்கள் நலனுக்காக இழந்தேன்... நடிகை சமந்தா உருக்கமான பேச்சு..!