"பையா" படத்தில் நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாகவும் மீண்டும் அவருடன் இணைந்து "சிறுத்தை" படத்தில் நடித்து 'சிறந்த ஜோடி' என மக்களால் புகழப்பட்டவர் தான் நடிகை தமன்னா. இவரை இன்றும் நினைவு கூற எண்ணும்போதே "அடடா மழை டா அட மழைடா" என்ற பாடலும் "என் காதல் சொல்ல நேரமில்லை"என்ற பாடலும் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு அழகையும் நடிப்பையும் கலந்து பாவனையாக முகத்தில் மாற்றி நடனத்தின் வழியாக மனதை கொள்ளை கொள்பவர் நடிகை தமன்னா.

இப்படி பட்ட தமன்னா, 2005ம் ஆண்டு "சாந்த் சே ரோசன் செகரா" என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து சினிமா உலகத்தில் அறிமுகமானார். பின், தமிழ் திரைப்பட உலகில் "கேடி" என்ற அட்டகாசமான படம் மூலமாக அறிமுகமானார். இப்படம் நடிகை பாவனா நடிகர் ஆர்யாவை திருமணம் செய்ய தனது அண்ணனை வைத்து முயற்சிக்கும் படமான "ஆர்யா" படத்தை போல், இப்படத்திலும் ரவி கிருஷ்ணாவை திருமணம் செய்ய தன் அண்ணனுடன் சேர்ந்து போராடுவார் நடிகை தமன்னா. ஆனால் கடைசியில் ரவி கிருஷ்ணனுக்காக தன் அண்ணனையே கொலை செய்த தமன்னாவை ஏமாற்றி தன் காதலியான இலியானாவை திருமணம் செய்து தமன்னாவுக்கு ஷாக் கொடுப்பார் ரவி கிருஷ்ணா. இப்படி அற்புதமாக அமைந்திருக்கும் இத்திரைப்படம்.
இதையும் படிங்க: கால்ஷீட் கொடுக்காத ஹீரோயின்.. பின் வந்தவர் தான் தமன்னா.."பையா" இயக்குநர் ஹார்ட் டச் ஸ்பீச்..!

இதனை அடுத்து "கல்லூரி" திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதநை தொடர்ந்து, நடிகர் தனுசூடன் "படிக்காதவன்", சூர்யாவுடன் "அயன்" போன்ற படங்களில் நடித்து வந்தவர். அப்படியே தென் இந்தியா முழுவதுமாக சுற்றி தற்பொழுது வட இந்தியாவிலும் தனது காலடி தடத்தை பதித்து பான் இந்தியா ஸ்டாராக மாறி இருக்கிறார்.

இவரது சிறந்து படங்களாக பார்த்தால், எனக்கு 20 உனக்கு 18, வியாபாரி, அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி, கோ, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, தேவி, கத்திச்சண்டை, தர்மதுரை, தோழா, பாகுபலி 2, கே ஜி எஃப் (சேப்டர் 1), ஸ்கெட்ச், சயீரா நரசிம்ம ரெட்டி, கண்ணே கலைமானே, ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ், தேவி 2, ஜெயிலர், அரண்மனை 4 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை தமன்னா காதலித்து வந்த விஜய் வர்மாவுடன், நீண்ட காலமாக இருந்த காதல் பந்தத்தை சமீபத்தில் முறித்திருக்கிறார். அதற்கு உதாரணமாக, சமீபத்தில் தமன்னா போட்ட பதிவே சாட்சி, அதில், "வாழ்க்கையில் அற்புதங்கள் என்பது அதுவாகவே நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது. நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள பழக வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்தே ரசிகர்கள் இவர்களது பிரிவை உறுதி செய்தனர்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தமன்னாவும் விஜய் வர்மாவும் ஒரே இடத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்கள். ஆனால் அப்போது இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சரியாகக்கூட பேசிக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இப்படி இருக்க, காதல் தோல்வியில் தமன்னா மனம் உடைந்து அழுது கொண்டு இருப்பார் என பார்த்தால், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அசத்தலான தனது போட்டோக்களை வெளியிட்டு "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்பதை போல அசத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் வெளியானது மந்திரவாதி தமன்னாவின் ஓடேலா 2 டீசர்....! பேய் பிசாசுடன் சுற்றும் கதாநாயகி..!