ரஜினியையே அலறவிட்ட நடிகை என்றால் அவர் தான் விஜயசாந்தி, இவரது பெயரை கேட்டால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மன்னன் திரைப்படம் தான். அந்த படத்தில் தனது அழகான, திமிரு தனமான நடிப்பை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர். அப்பொழுதே "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டம் பெற்ற விஜயசாந்தி நடிகர் ரஜினியுடன் நடித்த மன்னன் படத்தில் தனது பெயரையும் லேடி சூப்பர் ஸ்டார் என படத்தின் டைட்டிலில் போட சொல்ல, இயக்குனர் ஒத்து கொள்ளாததால் இறுதியில் நடிகர் ரஜினி வந்து இரண்டு பேரின் பெயரிலும் எந்த சிறப்பு பட்டமும் போட வேண்டாம் என் சொல்லி பிரச்சனையை அவர் வந்து முடிக்குமளவிற்கு பிடிவாதம் பிடித்தவர் விஜயசாந்தி.

இப்படி பட்ட விஜயசாந்தி ஆந்திராவை சேர்ந்தவர். என்னதான் இவர் பிறப்பு ஆந்திராவாக இருந்தாலும் அவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தனது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த இவர், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பல தயாரிப்பு நிறுவனங்களில் நடைபெற்ற ஆடிஷன்களில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இப்படி இருக்க, ஒருமுறை, இயக்குனர் பாரதிராஜாவின் கார் ஒரு சிறிய தயாரிப்பு நிறுவனத்திற்கு நேராக பஞ்சர் ஆகிவிட சிறிது நேரம் ஓய்வெடுக்க அங்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: AK தரிசனத்தை டீவியில் காண தயாராகும் இளசுகள்..! 'குட் பேட் அக்லி' படத்தின் ஓடிடி அப்டேட்..!

அப்போது அங்கே இருந்த புகைப்படங்களை பார்த்த பாரதிராஜாவின் கண்ணில் விஜயசாந்தியின் போட்டோ பட, உடனே விஜயசாந்தியை அழைத்து அவரது "கல்லுக்குள் ஈரம்" என்ற படத்தில் நடிக்க வைத்தார். இந்த படம் நல்ல ஹிட் கொடுத்தது. இதனை அடுத்து தெலுங்கு உலகிலும் தடம் பதிக்க நினைத்த விஜயசாந்தி,அங்கு 1990-ல் "கார்தவ்யம்" என்ற படத்தில் பெண் காவல் துறை அதிகாரியாக நடித்தார். அந்த படம் தெலுங்கில் மாபெரும் ஹிட் கொடுக்க, தமிழிலும் அதே படத்தை "வைஜெயந்தி ஐபிஎஸ்" என்ற பெயரில் ரிலீஸ் ஆகியது. இங்கும் அந்த படம் மாஸ் ஹிட் கொடுத்தது.

இப்படி இருக்க, எனது வெற்றிக்கு காரணம் எனது கணவர் தான் என ஒவ்வொரு முறையும் கூறும் விஜயசாந்தி, தற்பொழுது தெலுங்கு சினிமாவில் அம்மா போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லலாமல் ஆந்திரா அரசியலிலும் கலக்கி வருகிறார்.
இந்த சூழலில், சினிமாவில் 14ன்கு வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த 'சரிலேறு நீக்கெவரு' என்ற படத்திலும் 'அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி' என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் விஜயலட்சுமி. அப்படம் கடந்த வாரம் வெளியாகி ஓடி வருகிறது. இந்த நிலையில், இப்படத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயசாந்தி காட்டமாக சினிமாவை விமர்சிப்பவர்களை குறித்து பேசினார்.

அவர் பேசுகையில், “எங்கள் கடின உழைப்பின் பலனைக் இப்படத்தின் வாயிலாக கண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர்கள் இனி சமரசம் செய்து கொள்ளளாமல், காரணம் இந்தப் படத்தை ஒரு பெரிய வெற்றியாக மாற்றியுள்ளனர். இந்த படம் ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உணர்ச்சிகள் நிறைந்த படம்.
இந்த படத்தை குறித்து வெளிவரும் கருத்துக்களில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் எதிர்மறையான கருத்துக்களைப் பரப்புவதை கொஞ்சம் நிறுத்துங்கள் அவை பொருத்தமானதல்ல. ஒவ்வொரு புதிய படத்தையும் ஓடவிடாமல் முடித்து வைக்க அதிக முயற்சி செய்ப்பவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சினிமா துறையை வாழ விடுங்கள். ஒரு படத்தை முழு மனதுடன் ஆசீர்வதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு தயாரிப்பாளரின் முதலீட்டை தயவு செய்து கெடுக்காதீர்கள். இந்தப் படம் கண்டிப்பாக இறுதியில் வெற்றி பெறும். இந்தப் படத்தின் தயாரிப்பின் போது கல்யாண் ராமுடன் எனக்கு ஒரு நேர்மறையான பிணைப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே, அவர் என்னை 'அம்மா, அம்மா' என்று அன்பாக அழைத்தார், மேலும் மிகுந்த அன்பையும் அரவணைப்பையும் உச்சபச்சமாக வெளிப்படுத்தினார்,

மேலும், சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் எந்த ஒரு புதிய படத்தையும் 'டிரோல்' என்ற பெயரில் கண்டபடி விமர்சிப்பது இப்பொழுதெல்லாம் ஃபேஷனாகிவிட்டது. என்ன செய்வது அது உங்கள் இயலாமை. அதனால் பல படங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை சிந்திக்கவேண்டும் என காட்டமாக பேசியிருக்கிறார் நடிகை விஜயசாந்தி.

இதனை பார்த்த நெட்டிசன்கள் விஜயசாந்தி அம்மா நீங்கள் ஒன்றும் நம் "ப்ளூ சட்டை மாறனை" சொல்லவில்லையே என கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பலித்தது பாக்கியத்தின் கனவு! இசக்கிக்கு ஆபத்தில் இருந்து மீள்வரா? அண்ணா சீரியல் அப்டேட் !