×
 

7 பேரால் சிதைக்கப்பட்ட சிறுமி! மாணவர்கள் போர்வையில் காம அரக்கன்கள்! கோவையில் கல்லூரி மாணவர்கள் கைது!

கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அடுத்தடுத்து நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் உச்சமாக கோவையில் அரங்கேறியுள்ள சம்பவம் தமிழகத்தையே புரட்டிப்போட்டுள்ளது. 

கோவை மாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, இன்ஸ்டாகிராம் மூலம் சில கல்லூரி மாணவர்களுடன் பேசிவந்துள்ளார். நாளடைவில் அந்த பழக்கம் நட்பாக மாறியுள்ளது. அதில் சில மாணவர்கள் கோவை குனியாமுத்தூர் பகுதியில் உள்ள தங்களது ரூமிற்கு மாணவியை அழைத்துள்ளனர். நண்பர்கள் தானே என்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் சிறுமியும் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ரூமில் இருவேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் இருந்துள்ளனர். அவர்கள் 7 பேரும் கூட்டாக சேர்ந்து மாணவியை இரவு முழுவதும் சீரழித்துள்ளனர்.

இதையும் படிங்க: 16 நாட்களும் 24 மணி நேர வீடியோ அழைப்பு... ரூ.1.11 கோடி டிஜிட்டல் மோசடி- கோவையில் டுபாக்கூர் சிபிஐ..!

இந்நிலையில் மாலை வீடு திரும்பிவிடுவேன் எனக்கூறிச் சென்ற தனது பேத்தியை காணவில்லை என அவரது பாட்டி தவித்துள்ளார். இரவு வரை பேத்தி வீடு திரும்பாததால் சிறுமியின் பாட்டி உக்கடம் போலீசில் புகார் செய்தார். இரவு முழுவதும் பேத்தியை அனைத்து இடங்களிலும் தேடி உள்ளார். செல்போனிலும் பேத்தியை தொடர்புகொள்ள முடியவில்லை. மறுநாள் காலை வீட்டுக்கு வந்த பேத்தியிடன் பாட்டி விசாரித்துள்ளார். தனக்கு நடந்த கொடுமையை சொல்லி பேத்தி கதறி அழுதுள்ளார். பேத்திக்கு நடந்த கொடுமை குறித்து பாட்டி போலீசில் புகாரளித்துள்ளார்.

அந்த 7 மாணவர்களிடமும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து 7 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மற்றொரு கோவை ஆகிறதா மதுரை? வணிக கோணத்தில் திருப்பரங்குன்றம் மறியல்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share