×
 

100 கோடியில் வீடு... பணத் திமிரு; ஸ்டேட்டஸ் அரிப்பு... நயனை கிழித்தெடுத்த பத்திரிக்கையாளர்!!

நயன்தாரா கட்டியுள்ள புதுவீடு குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் பேசியிருப்பது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை நயன்தாரா சுமார் 75 படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சந்திரமுகி, கஜினி, பில்லா மற்றும் யாரடி நீ மோகினி போன்ற படங்களுக்கு பிறகு திரையுலகில் பிரபலமானவராக வலம் வந்தார். இதனிடையே நயன்தாரா சில ஆண்டுகளுக்கு முன் போயஸ் கார்டனில் ஒரு வீட்டை வாங்கி இருந்தார். அந்த வீட்டை தற்போது இடித்துவிட்டு தனது விருப்பத்திற்கேற்ப தற்போது ஸ்டூடியோ போல் கட்டியுள்ளார்.

இந்த வீடு சுமார் 7,000 சதுர அடியில் 100 கோடி ரூபாய் செலவில் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வீடு குறித்து பத்திரிக்கையாளர் சேகுவேரா யூடியூப் ஒன்றில் பேசியிருப்பது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அவர் பேசுகையில், தமிழகத்தில் பிரபலமாக இருந்த அனைத்து ஸ்டூடியோக்களும் இப்போது அப்பார்ட்மெண்ட் ஆகவும், மருத்துவமனைகளாகவும் மாறிவிட்டன. ஒரு காலத்தில் சிவாஜி கணேசன் தனது வீட்டை பல படங்களுக்கு சூட்டிங்கிற்காக வாடகைக்கு விட்டார்.

இதையும் படிங்க: 'டெஸ்ட்' படத்தில் ஹீரோ மாதவனுக்கு நிகராக சம்பளம் வாங்கிய நயன்தாரா... எவ்வளவு தெரியுமா?

அதற்கு காரணம் பண தேவை தான், இவ்வளவு பெரிய பிரமாண்டமான வீடு வைத்து அதன் மூலம் ஆதாயம் பெறலாம் என்பதற்காக சிவாஜி கணேசன் தனது வீட்டை படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் பார்த்தார். அந்த நோக்கத்தோடு தான், நயன்தாராவும் தற்போது தனது வீட்டை ஸ்டூடியோவாக வடிவமைத்து இருக்கிறார். வீட்டை வாடகைக்கு விடும் நோக்கத்தோடு முன்னெச்சரிக்கையாக இந்த முடிவை எடுத்திருக்கிறார். தற்போது நயன்தாரா மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இப்படி ஒரு வீடு தேவைப்பட்டால் கூட, நயன்தாரா தனது இந்த வீட்டை வாடகைக்கு விட்டு அதன் மூலமாக அவர் பணம் சம்பாதிப்பார்.

அந்த வீட்டுக்காக, நயன்தாரா 100 கோடி ரூபாய் முதலீடு செய்து இருக்கிறார். அந்த முதலீடு செய்ததன் மூலம் ஏதாவது பணம் வர வேண்டுமே என்பதற்காக நயன்தாரா இந்த முடிவு எடுத்திருக்கலாம். பல நடிகைகள் பிரபலமாக இருந்தபோது சேர்த்து வைக்காததால் ஓட்டாண்டியாக இருந்து எதுவுமே இல்லாமல் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக நயன்தாரா இந்த முடிவை எடுத்திருக்கலாம். மற்ற படங்களுக்கு இல்லாவிட்டாலும் தான் நடிக்கும் படங்களின் படத்திற்காவது நயன்தாரா இந்த வீட்டை வாடகைக்கு விடுவார்.

தனுஷ் கூட 150 கோடி ரூபாயில் போயஸ் கார்டனில் வீடு கட்டினார். தற்போது அவர் ஷூட்டிங்கில் தான் அதிக நேரம் இருக்கிறார், அதேபோலத்தான் நயன்தாராவும் 100 கோடியில் வீடு கட்டி இருக்கின்றார். அவருக்கு சம்பளமே 20 கோடி வருகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். இதனால், இவர் இவ்வளவு ஆடம்பரமாக வீடு கட்டி இருக்கிறார். ஆனால், என்னை பொறுத்தவரையில் இதெல்லாம் மிகப்பெரிய ஆடம்பரமாக தான் நான் பார்க்கிறேன். அந்த நடிகர் 100 கோடியில் வீடு கட்டினால்.

நான் 300 கோடியில் வீடு கட்டுவேன் என்று ஒருவருக்கு ஒருவர் வரும் ஸ்டேட்டஸ் அரிப்பு தான் இப்படி பிரம்மாண்ட வீடு கட்ட காரணம். வாழ்வதற்கு ஒரு வீடு தேவை அவ்வளவுதானே தவிர இவ்வளவு ஆடம்பரமான ஒரு வீடு தேவையில்லை. அப்பேர் பட்ட ஜெயலலிதாவிற்கே கடைசியில் ஆறு அடி தான் மிஞ்சியது. நயன்தாரா உழைத்து சம்பாதித்து தான் வீடு கட்டி இருக்கிறார். இதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை என்றாலும், இவை அனைத்தும் பணத் திமிரைத்தான் காட்டுகிறது என்று கடுமையாக சாடினார்.  

இதையும் படிங்க: வெளியானது நயனின் கதாபாத்திர அறிமுக வீடியோ...! ரிலீசான சிறிது நேரத்தில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share