SHOCKING VIDEO: கார் விபத்தில் உயிர் தப்பிய அஜித் - பதற வைக்கும் வீடியோ காட்சி!
துபாயில் நடந்த கார் ரேசின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் காயமின்றி உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
துபாயில் நடந்த கார் ரேசின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் காயமின்றி உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
துபாயில் அஜித்:
நடிகர் அஜித் ”அஜித்குமார் ரேசிங்” என்ற கார் ரேஸ் கம்பெனி ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில் இவரது குழு துபாயில் நடைபெறவுள்ள 'துபாய் 24 மணி நேர பந்தயத்தில்’ பங்கேற்கவுள்ளது. இதற்கான முதல் தொடர் போட்டியானது துபாயில் வரும் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதற்கான பயிற்சிக்காக நடிகர் அஜித் உட்பட ஒட்டுமொத்த அணிம் இரு தினங்களுக்கு முன்பு துபாய் சென்றது. குறிப்பாக இந்த போட்டியின் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் அஜித் கார் ரேஸில் களமிறங்கவுள்ளார். சர்வதேச அளவிலான போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
அஜித்திற்கு என்ன ஆச்சு?
இதற்காக துபாயில் அஜித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த ரேஸ் கார், வேகமாக ஓடி பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் இரண்டு, மூன்று முறை வேகமாக சுழன்று நின்றது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இந்த விபத்தில் அஜித் குமாருக்கு சிறு கீறல்கள் கூட ஏற்படவில்லை என்றும், அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வரும் வீடியோவில், கார் ரேசிங் சர்க்யூட்டில் அஜித் கார் விபத்துக்குள்ளாகி சுழலுவதைப் பார்த்த ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு என்ன ஆனது என்ற பதற்றம் ரசிகர்களை தொற்றிக்கொள்ளும் முன்பே, காரில் இருந்து அவர் வெளியே வந்து நிற்கும் காட்சிகளைப் பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.
மனைவி பரிசளித்த கார்:
நடிகர் அஜித் குமார் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கார் அவரது மனைவி ஷாலினி அவருக்கு பரிசாக வாங்கிக்கொடுத்ததாகும். அந்த காரை ரேஸ் காராக மாற்றித் தான் அஜித் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். விலையுயர்ந்த சொகுசு காரான அதில், விபத்து நிகழ்ந்தாலும் உள்ளே இருப்பவர்களை பாதுகாக்கத் தேவையான அத்துணை அம்சங்களும் இருப்பதே, அஜித் சிறிய காயம் கூட இன்றி தப்பியதற்கு காரணமாகும்.
அஜித் கார் விபத்துக்குள்ளாகும் வீடியோ இதோ...
https://publish.twitter.com/?u
நடைமுறையில் அஜித் குமாரின் பெரும் விபத்து, ஆனால் அவர் காயமின்றி விலகிச் செல்கிறார். அலுவலகத்தில் இன்னொரு நாள்... அது பந்தயம்!😨😓❤🙏
நடைமுறையில் அஜித் குமாரின் பெரும் விபத்து, ஆனால் அவர் காயமின்றி விலகிச் செல்கிறார். அலுவலகத்தில் இன்னொரு நாள்... அது பந்தயம்!😨😓❤🙏
— Thoothukudi Ajith FC (@AKFCThoothukudi) January 7, 2025
Thank God🙏My Man Safe ❤#Ajith #ajithkumarracing #Ajithkumar𓃵 #ajithfansclub #VidaaMuyarchi #GoodBadUgly pic.twitter.com/9UkrdRYshyஇதையும் படிங்க: 3 ஊரில் சர்வதேச பலூன் திருவிழா...எப்போ ..? எங்கே ..? முழுவிவரம் உள்ளே ..!