தமிழில் அறிமுகமாகும் தசரா பட ஹீரோ... உடலை வருத்தி ஷூட்டிங்!!
தசரா படத்தில் நடித்த பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு பட நடிகர் தீக்ஷித் ஷெட்டி தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.
அண்மையில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த தசரா படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்தவர் தீக்ஷித் ரெட்டி. படத்தில் நானிக்கு சரிசமமான கேரக்டரில் நடித்த தீக்ஷித் ரெட்டிக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. 'கே டி எம்', 'பிளிங்க்', 'தசரா', 'தி கேர்ள் பிரண்ட்' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தீக்ஷித் ரெட்டி கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகை தொடர்ந்து தமிழுக்கு அறிமுகமாகிறார்.
ஶ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் பேனரில் ஜி. சரவணன் தயாரிக்கும் படத்தை சாரா இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக 'பிக் பாஸ்' புகழ் ஆயிஷா ஜீனத் நடிக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி ஹீரோவாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.
இதையும் படிங்க: ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை கயாடு லோஹர்... தமிழில் வரிசை கட்டும் படங்கள்.!
மலேசியாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் தீக்ஷித் ஷெட்டியின் நடிப்பில் பிரமாண்ட வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிரது. இந்த படத்துக்கு வெங்கி சூரினேனி ஒளிப்பதிவு செய்கிரார்.
இந்த படத்துக்காக 'காஸ்ட் அவே,' 'கோட் லைஃப்' போன்ற படங்களுக்கு இணையான அர்ப்பணிப்போடு தீக்ஷித் ஷெட்டி தன் உடலை வருத்திக் கொண்டு தத்ரூபமாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மலேசியாவில் மிகுந்த பொருட்செலவில் நடந்து வருவதால் விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பக்தி பரவசத்தில் கத்ரீனா கைஃப்..! அப்போ தமன்னா... இப்ப கத்ரீனா...அடுத்து யாரோ..! இப்படியும் புனித நீராடலாமா..!