தக் லைஃப் குறித்த அட்டகாச அப்டேட்.. பர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா..?
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனும், மணிரத்னமும் இணையும் திரைப்படம் என்பதால் தக் லைஃப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு, தொடங்கிய நாள்முதல் இன்று வரை குறையவில்லை. அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் அட்டாகச அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது படக்குழு..
படத்தில் கமல்ஹாசனின் தோற்றம் வெளியான தேதியில் இருந்து அதனை திரையில் காண கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றனர். பொதுவாக மணிரத்னம் படங்களில் காதல், ஆண் - பெண் உறவுச்சிக்கல்கள் அதிகமாக பேசப்பட்டு இருக்கும். இல்லையென்றால் நாட்டுப்பற்று என்ற அம்சம் மேலோங்கி இருக்கும்.
இதையும் படிங்க: கூலி படப்பிடிப்பு நிறைவு... அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!
நேரடியான ஆக்சன் படங்கள் என்பது மணிரத்னம் லிஸ்ட்டில் இல்லாத ஒன்று. ஆனால் தக் லைஃப் என்ற படத்தின் தலைப்பில் இருந்தே இது என்னமாதிரியான ஆக்சன் படம் என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. அதுவும் முதல் ப்ரோமோ வந்தபோது சக்திவேல் நாயக்கனாக கமல்ஹாசனின் தோற்றம் அதிரிபுதிரி பரவசத்தை ஏற்படுத்தியது.
போதாக்குறைக்கு சிம்பு, த்ரிஷா, மலையாளத்தின் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் இந்தியில் இருந்து அலி பசல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவர்களுக்கான ரசிகர்களும் எப்போது தக் லைஃப் திரைக்கு வரும் என தவம் கிடக்கின்றனர்.
இந்நிலையில் ஜுன் 5-ந் தேதி படம் ரிலீசாகும் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்தது. படம் வெளியாவதற்கு இன்னும் 65 நாட்கள் இருக்கிறது என்ற அறிவிப்போடு புதிய ப்ரோமோ ஒன்றை எக்ஸ் தளத்தில் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் கமலின் சிறுவயது தோற்றம் முதல் தக் லைஃப் வரையிலான தோற்றங்கள் மின்னல்வேகத்தில் தோன்றி மறைகின்றன. அந்த சின்ன காட்சி துணுக்குக்குக் கூட ஏ.ஆர்.ரஹ்மான்,. பிரமாதமான பின்னணி இசையை வழங்கி உள்ளார். ஜுன் 5-ந் தேதிக்கு இன்னும் 65 நாட்களே உள்ளன என்ற எதிர்பார்ப்போடு அந்த ப்ரோமா நிறைவடைகிறது.
இன்னும் சில நாட்களில் தக் லைஃப் படத்தின் ப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாம். அந்த பாடலை கமல்ஹாசனே எழுதி உள்ளாராம். விண்வெளி நாயகனுக்காக காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.
இதையும் படிங்க: சேட்டன்கள் எப்படிதான் இப்படி படம் எடுக்குறாங்களோ.. இணையத்தைக் கலக்கும் ஆசிப் அலியின் ரேகாசித்ரம்..!