கண்ணப்பரை காண கண்ணப்பா படத்துக்கு வாங்க..! 100 கோடி பட்ஜெட் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!
கண்ணப்பரை காணும் கண்ணப்பா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இதுவரை தமிழில் ராமாயணம் மகாபாரதம் போன்ற வரலாற்று சிறப்புகளை போற்றும் படைப்புகளை பார்த்து இருப்போம். ஆனால் அதனை தொடர்ந்து வருகிறது "கண்ணப்பா திரைப்படம்". இயக்குனர் லிங்குசாமி மகாபாரதத்தை இயக்க உள்ளதாக கூறிய நிலையில் இந்த படம் பெரிதும் வரவேற்புள்ளதாக உள்ளது.
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்மிக படம் என்றால் அது "கண்ணப்பா". காரணம் ரூ.100 கோடி பட்ஜெட்டில், ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், ஸ்டீபன் தேவாசி இசையில், பிரபாஸ், மோகன்லால், விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிக்க தயாராகி கடந்த ஆகஸ்ட் 18, 2023 அன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்பொழுது முழுப்படமாக்கப்பட்டு உள்ளது "கண்ணப்பா" திரைப்படம்.
இதையும் படிங்க: தொடையழகி ரம்பா கம்பேக்... ரம்பா ராக்... ஹீரோயின்ஸ் ஷாக்...இனி தான் ஆட்டமே..!
இப்படத்தில், திண்ணு கண்ணப்பர் கதாபாத்தில் விஷ்ணு மஞ்சுவும், இளம் தின்னடு கதாபாத்திரத்தில் அவ்ராம் பக்த மஞ்சுவும், மகாதேவ சாஸ்திரி கதாபாத்திரத்தில் மோகன் பாபுவும், நாதநாடுடாக கதாபாத்திரத்தில் ஆர்.சரத்குமார், பன்னகா கதாபாத்திரத்தில் மதுவும், கம்படு கதாபாத்திரத்தில் முகேஷ் ரிஷியும், கவ்வராஜா கதாபாத்திரத்தில் பிரம்மஜியும், வீரா கதாபாத்திரத்தில் கருணாஸும், பிலாகா கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
மேலும், வருகின்ற ஏப்ரல் 25ம் தேதி படம் வெளியாகி உள்ள அறிவிப்பை தெரிந்த ஆன்மிக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ... கைதி, விக்ரம் படங்களை டீலில் விட்டாரா இயக்குனர்..?