வந்துவிட்டது சர்தார்-2 படத்தின் டீசர்.. பட்டயக் கிளப்பும் கார்த்திக் - எஸ்.ஜே.சூர்யா காம்போ..!
நடிகர்கள் கார்த்திக், எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள சர்தார்-2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் நடித்து 2022-ல் வெளிவந்து மிகப்பெரும் வெற்றிப் பெற்ற படம் சர்தார். அந்த படம் வரும்போதே இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பும் வெளியாகி இருந்தது. கடந்த ஓராண்டாக இப்படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதன் முன்னோட்ட வீடியோ வெளியாகும் விழா சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தில் கார்த்திக் உடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரெஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு மிரட்டல் இசை அமைத்துள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முதல் பாகத்தில் சண்டைக் காட்சிகள் வெகுவாக பேசப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தில் திலீப் சுப்பராயன் மற்றும் சேதன் டிசௌசா ஆகியோர் சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக பணிபுரிந்துள்ளனர். ரத்னகுமார், ஆஷ்மீரா ஐயப்பன், விக்னேஷ் முனியாண்டி ஆகியோர் கதை எழுத, நம்பி திரைக்கதை அமைத்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த பிரமாண்டம்… கண்ணப்பா படத்தின் டீசரை பார்த்து வியந்த ரசிகர்கள்!!
சர்தார் முதல் பாகத்தில் இரட்டை வேடங்களில் கார்த்திக் நடித்திருந்தார். தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நம் நாடு வந்துவிடக்கூடாது என்று காரணத்திற்காக அவப்பெயரை தாங்கிக் கொண்டு 32 ஆண்டுகள் சிறையில் வாடும் ஒரு இந்திய உளவாளியின் கதையாக இது அமைந்திருந்தது.
கிட்டத்தட்ட அதேபாணியில் இந்தமுறையும் சீனாவின் வர்த்தக மற்றும் பொருளாதார ஊடுருவலை தடுக்கும் ஒரு கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்துள்ளார். இம்முறை BLACK DAGGER என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிரட்டல் நடிப்பை வழங்கி உள்ளாராம்.
இன்று வெளியாகி உள்ள முன்னோட்ட வீடியோவில் சீன ராணுவத்தினருடன் கார்த்திக் மோதும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கிராபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக அமைந்துள்ளது இப்படத்திற்கான முன்னோட்டத்தை விறுவிறுப்பாக்கி உள்ளது.
இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் மாஸ் சம்பவம் செய்த அஜித்...தெறிக்கவிடும் ரசிகர்கள்!!