காத்திருப்பே வெறி ஏற்றுதே..! அடுத்த டீசருக்கான அப்டேட்.. இதயத்துடிப்பை எகிற வைக்கும் படம்..!
நடிகர் நானியின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்திற்கான அப்டேட் வெளியாகி உள்ளது
தெலுங்கு இன்டஸ்ட்ரி ஆனாலும் தமிழ் இன்டஸ்ட்ரி ஆனாலும் எல்லாருக்கும் நான் நல்ல பிள்ளை செல்ல பிள்ளை என்று வலம் வருபவர் நடிகர் 'நானி'. படத்தில் பார்க்கும் பொழுது காமெடி செய்பவராக மட்டும்தான் தெரியும். ஆனால் கோபம் வந்தால் எதிரிகளை பந்தாடும் முரட்டு ஹீரோவாக மாறி விடுவார். அப்படிப்பட்ட நானியின் உண்மையான பெயர் 'நவீன் பாபுகாண்ட'.
நானி பற்றி சுருக்கமாக கூற வேண்டும் என்றால், தனது கல்லூரி படிப்பை முடித்த பின்பு இயக்குநர் 'சிரீனு வைட்லவிடமும் பாபு'விடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதன் பின், ஐதராபாக்கத்தில் உள்ள பிரபல வானொலி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். இவைகளுக்கு பிறகு நானிக்கு, 2008ம் ஆண்டு 'அட்டா சம்மா' என்ற என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் இன்று தனக்கென ஒரு சாம்ராஜியத்தே உருவாக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: தயாராகிறது த்ரிஷ்யம் மூன்றாம் பாகம்..! உறுதி செய்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்...!
இவர் 2008 முதல் இன்று வரை எவ்வளோ படத்தில் நடித்து இருந்தாலும் நானி என்று சொன்னால் உடனே நினைவுக்கு வரும் படம் "நான் ஈ" திரைப்படம். தமிழ் திரையுலகம் மட்டும் அல்ல வெளிநாட்டவர் கூட இந்த படத்தை பார்த்து கைத்தட்டும் அளவிற்கு பாராட்டை பெற்ற படம். நடிகை சமந்தா மற்றும் நானி இருவரின் ஜோடி பொருத்தம் இந்த படத்தில் அப்படி இருக்கும். முதலில் நானியை மறைமுகமாக காதலித்த சமந்தாவை நானி துரத்தி துரத்தி காதல் செய்வார். இப்படி இருக்க "கொஞ்சம் உளறி கொட்டவா" என்று நானி ரொமான்டிக்காக பாடி ப்ரப்போஸ் செய்ய, சமந்தா தன் காதலை சொல்ல வருவார். அப்பொழுது நானியை கடத்தி செல்லும் வில்லன் கொன்று விடுவான். இதன் பின் உயிர் பிரிந்த நானியின் ஆத்துமா "ஈ"க்குள் சென்று சமந்தா மூலமாக வில்லனை கொள்ளும். ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த படம் என்றாலும் மிகையாகாது.
இப்படி "நான் ஈ" மூலமாக தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நானி. தெலுங்கில் பல படங்கள் நடித்தாலும் தமிழில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற "வெப்பம்" (2011), நான் ஈ" (2012), நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் (2012), ஆஹா கல்யாணம் (2014) ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இரைடு, சினேகிட்டுட, பீம்லி கபடி சட்டு, அலா மொதலைந்தி, பில்ல சமீந்தார், ஈகா, எட்டோ வெள்லிப்போயிந்தி மனசு, பைசா, சண்டா பய் கப்பிராசு போன்ற படங்கள் தெலுங்கில் உருவாகி தமிழில் டப்பிங்கில் வெளியான படங்கள்.
இந்த நிலையில், பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நடிகர் நானி நடித்து வரும் 'ஹிட் 3' படம் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி வெளியாக இருக்கும் பட்சத்தில் இப்படத்திற்கான டீசர் வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி வெளியாகும் என போஸ்டர் மூலம் அறிவித்து உள்ளனர் படக்குழுவினர்.
கடைசியாக பிரியங்கா மோகன் மற்றும் நானியின் நடிப்பில் வெளியான 'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், ஹிட் படம் வசூல் எப்படி இருக்குமோ என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை சைட் அடித்த ஆர்த்தி... க்யூட் லுக்கில் சிவாவுக்கு வலைவீச்சு...!