இதெல்லாம் வெட்கக்கேடானது... கோபத்தில் கொந்தளித்த நடிகர் பிரகாஷ் ராஜ்.!
மகா கும்பமேளாவில் புனித நீராடியது போன்று வெளியான புகைப்படம் போலியானது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, கைக்கூப்பி வணங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. சனாதன எதிர்ப்பாளர் என்று போலக் காட்டிக் கொள்ளும் நடிகர் பிரகாஷ்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடியதை கிண்டல் செய்து புகைப்படத்தில் தகவல்களும் இடம் பெற்றிருந்தன.
இதை பார்த்த பகிர்ந்த பலரும் நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் புனித நீராடி இருக்கிறீர்களே? என்று கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டனர். குறிப்பாக பாஜகவினர் இந்தப் புகைப்படத்தை அதிகளவில் பகிர்ந்து விமர்சித்தனர். இந்தச் சூழலில் இது போலியான புகைப்படம் என்று பிரகாஷ்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “அதெல்லாம் முடியாது... எங்களுக்கு இத மாத்தியே ஆகனும்” - அடம்பிடிக்கும் திமுகவினர்... அசைந்து கொடுப்பாரா உதயநிதி?
இது தொடர்பாக பிரகாஷ்ராஜ் கூறுகையில், “போலி தகவல் எச்சரிக்கை இது. இப்படி போலிப் புகைப்படம் வெளியிட்டு இருப்பது வெட்கக்கேடானது. இது குறித்து புகார் செய்திருக்கிறேன். சம்பந்தபட்டவர்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்வார்கள்” என்று தெரிவித்து உள்ளார். இந்தப் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கி சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிப்ரவரி 5-ந் தேதி சென்னையில் ED SHREEN இசை நிகழ்ச்சி