×
 

போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு திடீர் விசிட் அடித்த ரஜினி...!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.

சென்னையின் காஸ்ட்லியான இடங்களில் முக்கியமானது போயஸ் கார்டன். அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் போன்றோர் வசிக்கும் பகுதி என்பதால் போயஸ் கார்டன் என்ற பேருக்கே ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அங்குதான் வசித்து வந்தார். திரைப்படத்துறையில் உச்சத்தில் இருக்கும்போதே அங்கு இடம் வாங்கி, பார்த்து பார்த்து வீடு கட்டி அதற்கு அவரது தாயாரின் இயற்பெயரில் வேதாஇல்லம் என்று சூட்டி மகிழ்ந்தார்.

ஒருகாலகட்டத்தில் தமிழக அரசியலின் மையப்புள்ளியாக வேதா இல்லம் திகழ்ந்து வந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜகவின் முக்கியத் தலைவரான அத்வானி உள்பட நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் எல்லாம் அங்கு காத்திருந்த வரலாற்றை தமிழ்நாடு அறியும். அதேபோன்று அவர் வாழ்ந்த காலத்தில் அதிமுகவினருக்கு வேதா இல்லம் தான் கோயில், ஜெயலலிதா தான் கடவுள். போயஸ் கார்டனின் கதவுகள் திறக்கும்போதே நெடுஞ்சாண்கிடையாக அவர்கள் விழுந்து வணங்கிய காட்சிகளையும் தமிழ்நாடு பார்த்துள்ளது.

இதையும் படிங்க: டிவி பெட்டியை உடைத்துவிட்டு ஊழலுக்கு டப்பிங் கொடுக்கிறார்... கமலை தாறுமாறாக விமர்சித்த விஜய் கட்சி.!

அதே போயஸ்கார்டனில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் வசித்து வருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை, இருவருக்கும் இடையிலான நட்பு என்பது சற்று உரசலுடன் தான் இருந்து வந்தது. குறிப்பாக 1996 சட்டமன்ற தேர்தலின் போது மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினி பேசியது சர்ச்சைகளின் உச்சம். இதற்கு பின்னணியாக 1991-96 காலகட்டத்தில் ரஜினியின் கார், போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவர் காரில் இருந்து இறங்கி நடந்து வீட்டுக்கு சென்றதாகவும் பரவலாக பேசப்பட்டது. அந்தவகையில் போயஸ் கார்டன் என்பது ஜெயலலிதா - ரஜினி இருவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பல்வேறு சட்ட சிக்கல்களை தாண்டி, அவரது வேதா இல்லம் ரத்த சொந்தமான அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்கு என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. அப்போது முதல் ஜெ.தீபா, வேதா இல்லத்தில் வசித்து வருகிறார். இன்றைய தினம் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் என்பதால் அங்கு ஜெயலலிதாவின் புகைப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த், வேதா இல்லத்திற்கு வருகை தந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு விளக்கு ஏற்றியும், பூக்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினார். ரஜினியை ஜெ.தீபா உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த நிகழ்வு அரசியல் அரங்கில் ஆச்சர்யத்துடன் பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: அடிக்கிற அடியில அவன் கதறுனும்... விஜயை அட்டாக் செய்ய சதித்திட்டம் ... லீக்கானது ரஜினி ரசிகர்களின் ஷாக்கிங் ஆடியோ!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share