ரீரிலீசாகும் கண்ணாமூச்சி ரே...ரே.., ஓய் மலபார்.. படங்கள்...! அடுத்து டபுள் ட்ரீட் தான் போங்க..!
ரவி மோகனின் இரண்டு படங்கள் ரீரிலீஸ் ஆக இருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
ரவி மோகனை ஜெயம் ரவியாக மாற்றிய ஒரே படம் என்றால் அது "ஜெயம்" படம் தான். அந்த அளவிற்கு காதலின் வலிகளை மொத்தமாக திணித்திருப்பார் இயக்குநர். கண்ணாமூச்சி ரே..ரே..கண்டுபிடி யாரு.. என்ற பாடலை கேட்டால், இப்பொழுதும் மனதிற்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.
அது போல "திருவிழான்னு வந்தா இவ கோவில் வரமாட்டா" என்ற பாடலில் தன் காதலியை சிரிக்க வைக்கவும், பேச வைக்கவும் ரவி மோகன் பாடி ஆடி மகிழ்விப்பதை போல் அமைந்திருக்கும். இன்றும் பல இளசுகள் இந்த பாடலை கேட்டால் "அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே" என அழுவார்கள். அப்படி இருக்கும்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளும் ரவி மோகன்... கை வசம் இருக்கும் நிறைய படங்கள்..!
அதுமட்டுமல்லாமல், இதுவரை கயிறு கட்டி, மலையில் இருந்து இறங்கியவர்களையும், மரத்தில் இருந்து இறங்கியவர்களையும் பார்த்திருப்போம். ஆனால் முதல் முறையாக காதலியுடன் டூயட் பாடி ஆட, வீட்டின் ஓட்டை பிரித்து கயிறுடன் குதிக்கும் ஹிரோ தனது காதலியுடன் "கவிதையே தெரியுமா என் கனவு நிதானடி" என்று ரொமன்ஸ் செய்திருப்பார். இந்த காட்சிகளை பார்த்து அப்பொழுது கைகால்களை உடைத்து கொண்டவர்கள் அதிகம். அப்படி காதலில் வெறிகொண்டு இருந்த 90ஸ் ஹிட்ஸ்களுக்கு வரமாய் அமைந்த படம்.
இன்று பல படங்கள் வந்தாலும், இந்த படம் போன்ற படங்களின் அருகில் கூட நிறக்கமுடியாத குடும்ப படமாக இருந்தது. தற்பொழுது குடும்பமாக பார்க்கும் படம், தனியாக பார்க்கும் படம், காதல் ஜோடிகளுடன் பார்க்கும் படம், என பல வகையாக படத்தை பிரித்து வைத்து உள்ளனர். ஆனால் இந்த "ஜெயம்" படம் காதல் படமாக இருந்தாலும், குடும்பமே அமர்ந்து பார்க்கும் படமாக இருக்கும், வீட்டில் இருக்கும் பெரியவர்களே "கதாநாயகனின் தந்தையை பார்த்து மனுஷனா நீயெல்லாம் அந்த பிள்ளை பாவம் இல்லையா" என திட்டும் அளவிற்கு கனகச்சிதமாக இருக்கும் இப்படம்.
2002 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான படத்தின் ரீமேக் படமான ஜெயம், 2003ம் ஆண்டு தமிழில் உருவான அதிரடி காதல் படம். எம்.எல்.திரைப்பட கலைகள் நிறுவனம் தயாரிப்பில், எம். ராஜா இயக்கத்தில், ஆர்.பி. பட்நாயக் இசையில், ரவி மோகன், சதா, டி.கோபிசந்த், ராஜீவ் ,பிரகதி, நிழல்கள் ரவி, ராதா ரவி, நளினி, செந்தில் மற்றும் சுமன் செட்டி முதலானோர் நடித்த படம் தான் "ஜெயம்".
இந்த படம், தனது காதலை காப்பாற்றி கொள்ளவும், வில்லனிடம் இருந்து ஹீரோயினை காப்பாற்றவும், ஏழையாக இருந்தாலும் கோழையாக இருந்தாலும் காதல் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் காதலிப்பவர்களை அழைத்து செல்லும் என்பதை உணர்த்தும் அழகான படம். இந்த படம் தற்பொழுது ரீரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல், தனது அம்மாவின் கனவை நிறைவேற்றும் மகனாக இன்றுவரை அனைவரது செல்போனில் ஒலிக்கும் பாடலான "நீயே நீயே நானே நீயே" பாடலுக்கு சொந்தமான எம்.குரான் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படம், பிரகாஷ் ராஜின் உன்னதமான நடிப்பில், ரவி மோகன் தனது அம்மாவை எந்த அளவுக்கு நேசிப்பார் என்பதை உணர்த்தும் படமாக அமையும். தன் காதலுக்கு உதவும் தாயாக நதியாவும், பொறுப்பில்லாத அப்பாவாக பிரகாஸ்ராஜூம், மலபார் காதலியாக அசினும், பாக்ஸராக ரவி மோகனும் நடித்து அசத்தி இருப்பர்.
தற்பொழுது அடுத்தடுத்து இந்த இரண்டு படங்களையும் நவீன தரத்தில் உயர்தர 4K டிஜிட்டல் தொழில் நுட்ப உதவியுடன் உருவாக்கி வருவதாகவும்..விரைவில் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: எது பண்ணாலும்... விமானத்தில் இருந்தபடி ரவி மோகன் கொடுத்த அட்வைஸ்..