ரகசியத்தை உடைத்த யுவன் சங்கர் ராஜா.. ஹார்ட் பீட்டை எகிற வைக்க வருகிறது ஸ்வீட் ஹார்ட்..!
யுவன் சங்கர் ராஜா விரைவில் ஸ்விட் ஹார்ட் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறிய நிலையில் தற்போது ட்ரைலர் மூலம் படத்தின் ரிலீஸ் உறுதியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள், தொடரில் பலரது கவனத்தையும் ஈர்த்து, சன் மியூசிக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி, தனக்கு என ரசிகர்களை உருவாக்கி, மெல்ல மெல்ல நகர்ந்து சரவணன் மீனாட்சி இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக மாறி, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் 'காதல் ஒன்று கண்டேன்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ரியோ ராஜ்.
சன் மியூஸிக்கில் ரியோ ராஜ் எப்பொழுது லைவ்-க்கு வந்தாலும் உடனே பெண் ரசிகர்களின் போன் கால் வந்து விடும். அந்த ரசிகைகளின் வரிசையில் வந்த ஸ்ருதியை காதல் திருமணம் செய்தார். ரியோ ஸ்ருதியை திருமணம் செய்த பிறகு அதிர்ஷ்டம் கதவை தட்டுவது போல் பட வாய்ப்புகள் ரியோவுக்கு குவிய தொடங்கியது.
இதையும் படிங்க: 'ஸ்வீட்ஹார்ட்' யுவன் கொடுத்த அப்டேட்..! ஹார்ட் அட்டாக் வர போகுதா... இல்ல ஹார்ட் "பீட்" எகிற போகுதா..!
இதனை தொடர்ந்து, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரியோ, அடுத்து 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்தார், மேலும்,கடந்த ஆண்டு வெளியான "ஜோ" படத்தில் கல்லூரி காதல் தொடங்கி விருப்பம் இல்லா திருமணம் வரை தனது கதாபாத்திரத்தின் மூலம் காண்பித்து, பிறகு காதலை உணர்த்தும் வகையில் சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தின் ப்ரமோஷன் தனியார் யூடியூப் மூலம் நடைபெற்றது. இதனை அடுத்து தனியார் தொலைகாட்சியில் "டான்ஸ் ஷோ"வில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
இந்த சூழலில், அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில், கதாநாயகியான கோபிகா ரமேஷ் உடன் ரியோ ராஜ் கதாநாயகனாக "ஸ்வீட்ஹார்ட்" படத்தில் நடித்திருக்கிறார். மார்ச் 14ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம், ரசிகர் ஒருவர் "ஸ்வீட்ஹார்ட்" படத்தின் அப்டேட்டை எப்பொழுது கொடுப்பீர்கள் என கேட்டதற்கு "விரைவில்" என பதில் கூறி சென்றார்.
இந்த நிலையில், மார்ச் 14ம் தேதிதான் இப்படம் வெளியாகும் என்பதை உறுதி செய்து படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுது ஜோ படத்தை போல் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் போல் தெரிகிறது. இந்த படம் பயங்கர ஹிட் கொடுக்கும் படமாக அமையும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் கடல் பேய் படம் "கிங்ஸ்டன்"... ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!