சப்தம் படத்தில் சத்தம் தான் இருக்கு...நெகட்டிவ் கமெண்ட் கொடுத்த ப்ளூ சட்டை..!
ப்ளூ சட்டை மாறன் கொடுத்த கமெண்டால் பதட்டத்தில் உள்ளனர் படக்குழுவினர்.
தமிழில் எந்த படம் வந்தாலும் அதனை விமர்சிப்பதில் ப்ளூ சட்டை மாறன் கைதேர்ந்தவர். படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட ஒரு நிமிடம் பொறுத்து ப்ளூ சட்டை மாறன், என்ன சொல்கிறார் என்பதை கேட்டுவிட்டு பின்பு படத்தை பார்க்க செல்கின்றனர். அந்த அளவிற்கு ப்ளூ சட்டை மாறன் எது சொன்னாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. ஆரம்பத்தில் இவர் கொடுக்கும் ரிவ்யூக்களுக்கு மக்கள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், தற்பொழுது இவர் ரிவ்யூ சரியாக இருக்கும் என்ற வழக்கம் மாறி உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய், சைவ உணவு பற்றி பேசி சர்ச்சையை கிளப்பினார் ப்ளூ சட்டை மாறன். பின் டிராகன் மற்றும் தனுஷின் NEEK திரைப்படத்திற்கும் நல்ல பாசிட்டிவான ரிவியூவை கொடுத்தார். ஆனால் தற்போது வெளியான சப்தம் படத்தை குறித்து ப்ளூ சட்டை மாறன் நெகடிவாக பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: தியேட்டர் உரிமையாளருக்கு சப்தம் பட இயக்குநர் வேண்டுகோள்..! பார்வையாளர்களை கவர இப்படி ஒரு முயற்சியா - ரசிகர்கள் கிண்டல்..!
தமிழகத்தில் வெளியான மிருகம், ஈரம், அரவான், போன்ற படங்களை நடித்து, மரகத நாணயம் படத்தில் ஹிட் கொடுத்தவர் தான் நடிகர் ஆதி. தற்போது, அறிவழகன் இயக்கத்தில், லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து ஆதி நடித்துள்ள திரைப்படம் தான் சப்தம்.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் நிலையில், படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு படம் அருமையாக உள்ளது என கூறி வந்தனர். இந்த சூழ்நிலையில் படத்தின் இயக்குநரான அறிவழகன் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லெட்டர் அனுப்பி இருந்தார். அதில்
மதிப்பிற்குரிய அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வணக்கம்,
வெள்ளிக்கிழமை (பிப்.28) 7ஜி பிலிம்ஸ் தயாரிப்பில், ஆதி நடித்து, எனது இயக்கத்தில் 'சப்தம்' என்னும் திரைப்படம் வெளியாகி இருப்பதை அனைவரும் அறிவோம்.சப்தம் திரைப்படத்தின் கதை சப்தத்தை மையமாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு ஆவி திரில்லர் படம் என்பதால் இசை, ஒலியமைப்பு அனைத்தும் ஒரே சமயத்தில் பார்ப்பவர்களுக்கு அசௌகரியத்தை கொடுக்காது. அதன் துல்லியத்தை உணரும் வகையிலும், திகிலை உணர்த்தும் வகையிலும் டால்பி அட்மோஸ், 7.1,மற்றும் 5.1 முறையில் தனித்தனியே திரையரங்குகளுக்கு ஏற்றார் போல் அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் திரைப்படம் அனுபவம் என்பது பெரிய திரையில், நவீன ஒளி, ஒலி தொழில் நுட்பத்துடன் பார்க்கும் போதுதான் ஒரு முழுமையான திரையரங்க அனுபவம் கிடைக்கின்றது. எனவே, திரையிடுவதற்கு முன்பே ஒலி பெருக்கி, ஒலியமைப்பு கருவிகளை அளவு திருத்தி (Calibrate) செய்து இந்தப் படத்திற்கென ஒலி அளவினை 6 முதல் 6.5 என்று திரையரங்கு அளவு, அமைப்புக்கு ஏற்றவாறு வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். சப்தம் திரைப்படத்தின் அனுபவத்தினை மக்கள் முழுமையாய் உணரும் பொருட்டு உங்கள் ஒத்துழைப்பினை தாழ்மையுடன் எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்,
அறிவழகன் திரைப்பட இயக்குநர்.
என அந்த லட்டரில் குறிப்பிட்டு இருந்தார். அதனால் இந்த படத்தில் சவுண்ட் தான் முக்கியம் என நினைத்து அனைவரும் படத்தை பார்த்து வரும் சூழலில், சத்தம் மட்டும் தான் உள்ளது படத்தில் ஒன்றுமில்லை என கூறியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
இப்படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் கூறுகையில், இந்த வாரம் தமிழ் சினிமாவில் ஃபேண்டஸி ஹாரர் மற்றும் சவுண்ட் ஹாரர் என 2 வித்தியாசமான பேய் படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இரண்டு படங்களுமே ரசிகர்களை கவரும் விதமாக இல்லை அதுமட்டுமல்லாமல் நல்ல சீன் என்று ஒன்று கூட என் கண்களில் தென் படவில்லை என்றும் சப்தம் படத்தை பற்றி டிரைக்டர் லெட்டர் எல்லாம் கொடுத்து சொல்லும் பொழுது படம் சவுண்ட்-ல் பிரமாண்டம் இருக்கும் என நினைத்தேன். ஆனால் சப்தம் படம் ஒரே சத்தமாக இருக்கிறது மற்றபடி அந்த படத்தில் நல்ல கதையோ திரைக்கதையோ இல்லை என நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
இதனை பார்த்து ப்ளூ சட்டை மாறனை பலர் விமர்சித்து வருகின்றனர். படம் நன்றாக தான் உள்ளது எனவும் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆதி நிக்கி கல்ராணி விவாகரத்து.. ஆதி படம் வெளியாக உள்ள நிலையில் அதிர்ச்சி..!